நயன்தாராவே அப்படித்தான்.. வாடகைத்தாய் விண்ணப்பத்தால் சிக்கிய கும்பல்!

Author: Hariharasudhan
28 November 2024, 3:47 pm

சென்னையில் கணவரைப் பிரிந்து வாழ்ந்த பெண் வாடகைத்தாய் விண்ணப்பம் செய்திருப்பதன் பின்னணியில் ஒரு கும்பல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

சென்னை: சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் மாவட்ட வாடகைத்தாய் கலந்தாய்வுக் கூட்டம் சமீபத்தில் நடைபெற்று உள்ளது. இந்தக் கூட்டத்தில், வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொடுப்பதற்காக விண்ணப்பித்தோரின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வந்தன.

அப்போது, திருவொற்றியூரைச் சேர்ந்த தமிழரசி என்ற பெண் அதிகாரிகள் முன் ஆஜரானார். அவரிடம் விசாரிக்கையில், அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்து உள்ளார். பின்னர், தீர விசாரித்தபோது, கார்த்திக் என்பவர் உடன் தமிழரசிக்கு திருமணம் ஆனதாக அவர் சமர்பித்த பத்திரிக்கை போலி எனக் கண்டறியப்பட்டது.

அது மட்டுமல்லாமல், அவரது முதல் கணவரைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த தமிழரசி, அவரது புகைப்படம் மற்றும் பத்திரிக்கையைச் சமர்பித்து இருந்து உள்ளார். எனவே, உடனடியாக இது குறித்து தேனாம்பேட்டை போலீசாருக்கு தமிழரசியிடம் விசாரணை செய்த மருத்துவக் குழுவினர் தகவல் அளித்து உள்ளனர்.

இதன் பேரில் விசாரணை செய்த போலீசார், இடைத்தரகராக செயல்பட்ட மஞ்சு ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கோவையைச் சேர்ந்த தம்பதி, குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்ற சான்றிதழைப் பெற்று உள்ளனர். மேலும், அவர்கள் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற விரும்பி உள்ளனர்.

Surrogacy mother issue in Chennai Tiruvottiyur

இந்த விருப்பத்தை, தனியார் கருத்தரித்தல் மையத்தில் பணிபுரியும் பெண் ஒருவரிடம் கூறி உள்ளனர். இதற்கு 5 லட்சம் ரூபாய் வரை செலவாகும் எனக் கூறியதற்கு தம்பதியும் ஒப்புக் கொண்டு உள்ளனர். பின்னர், தம்பதியை பெண் ஊழியர், மஞ்சு மூலம் தமிழரசியிடம் அழைத்து வந்து உள்ளார்.

இதையும் படிங்க: Ex டிஐஜி மகன் வீட்டில் ஆப்பிரிக்க பெண்களை வைத்து பாலியல் தொழில்.. கூண்டோடு சிக்கியது எப்படி?

பின்னர், தமிழரசி கணவரைப் பிரிந்து வாழ்வது, அவரது பொருளாதார நிலையை வைத்து, வாடகைத்தாய் முறை சட்டவிரோதம் அல்ல என்றும், நயன்தாரா போன்றோரே வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்கின்றனர் என்றும் கூறி மூளைச்சலவை செய்து உள்ளார். பின்னர், அதற்கு தமிழரசி ஒப்புக் கொண்டு உள்ளார்.

இந்த நிலையில் தான், அதற்கான விண்ணப்ப பரிசீலனையின்போது தமிழரசி சிக்கி, இடைத்தரகராக செயல்பட்ட மஞ்சுவும் சிக்கி இருப்பது தெரிய வந்து உள்ளது. இதனையடுத்து, தனியார் கருத்தரித்தல் மைய பெண் ஊழியரை போலீசார் தேடி வருகின்றனர்.

  • Tom Holland and Zendaya gets engaged SPIDER MAN ரீல் ஜோடி ரியல் ஜோடியாகிறது.. முடிவுக்கு வந்த 4 வருட டேட்டிங்!
  • Views: - 273

    0

    0