பெண் மருத்துவர் கொடூர கொலை.. மருத்துவர்கள் போராட்டத்தால் கோவை அரசு மருத்துவமனையில் வெளி நோயாளிகள் அவதி..!!

Author: Sudha
17 August 2024, 12:29 pm

மேற்கு வங்காளத்தில் கொல்கத்தா ஆர்.ஜி. கர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 8-ம் தேதி பணியில் இருந்த முதுநிலை பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்.

இந்த கொடூர செயல் மீது வழக்கு பதிந்த போலிசார், குற்றவாளி சஞ்சய் ராய் என்ற நபரை கைதுசெய்தனர். இந்த குற்றத்தில் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.இந்த வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.

பெண் மருத்துவர் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.இந்த நிலையிலே, பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டும், மருத்துவர்களுக்கு பாதுகாப்பான பணி சூழலை ஏற்படுத்த வலியுறுத்தியும் நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் இன்று 24 மணிநேர வேலை நிறுத்தத்தில் ஈடுபட இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) அழைப்பு விடுத்தது.

அதன் அடிப்படையில் கோவை அரசு மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவில் மருத்துவர்கள் பணிக்கு வரவில்லை.கோவை அரசு தலைமை மருத்துவமனைக்கு தினந்தோறும் 6 ஆயிரம் நபர்கள் புற நோயாளிகளாக சிகிச்சைக்காக வருவது வழக்கம்.

இந்த நிலையிலே, மருத்துவர்கள் பணி புறக்கணிப்பினால், சிகிச்சை தருவதில் தோய்வு ஏற்பட்டுள்ளது.மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்கு வருவோருக்கு மருத்துவர்கள் வழக்கமான முறையில் சிகிச்சை தந்து வருகின்றனர்.தினமும் வரும் புறநோயாளி பிரிவில் டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகள் காத்துக் கிடக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்