அம்மன் கோவிலில் தாலி மாயம்.. சிசிடிவி காட்சியில் ஆளே இல்லாமல் பதிவான உருவம் : அலற விடும் ஷாக் வீடியோ!

Author: Udayachandran RadhaKrishnan
8 August 2024, 5:00 pm

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் நகர் பகுதியில் பழமை வாய்ந்த பச்சையம்மன் ஆலயம் உள்ளது.

இந்த ஆலயத்தில் நேற்று நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள் அம்மனின் கழுத்தில் அணியப்பட்டிருந்த ஒரு பவுன் தாலி செயின், மற்றும் உண்டியலில் இருந்த ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

காலையில் வழக்கம் போல கோவிலை திறப்பதற்கு வந்த பூசாரி கோவிலில் உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அரகண்டநல்லூர் போலீசருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற பச்சையம்மன் ஆலய உண்டியல் உடைத்து அம்மனின் தாலி செயின் திருடப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள கடை ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி ஒன்றினை ஆய்வு செய்தபோது அதில் நள்ளிரவு 2 மணி அளவில் மர்ம உருவம் ஒன்று கடந்து செல்வது பதிவாகியுள்ளது. இந்த வீடியோ காட்சிகள் இப்பகுதியில் சமூக வலைதளத்தில் வைரலாகி வருவதால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

  • actress Abort his Fetus After Famous Actor Warned வாரிசு நடிகருடன் கூத்து… கருவை சுமந்த நடிகை : காத்திருந்த டுவிஸ்ட்!