சென்னை மக்கள் வெளியே வர வேண்டாம்.. எங்கெல்லாம் ரெட் அலர்ட் : IMD எச்சரிக்கை!

Author: Udayachandran RadhaKrishnan
30 November 2024, 2:06 pm

வங்க கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் தனது கோரமுகத்தை காட்ட தொடங்கியுள்ளது.

நேற்று பிற்பகல் வங்ககடலில் உருவான இந்த புயல் இன்று மாலைக்குள் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 90 கிமீ வேகத்தில் சூறை காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதையும் படியுங்க: இப்போவே இப்படியா? சென்னையைச் சூழ்ந்த மழை வெள்ளம்.. மிரட்டும் ஃபெஞ்சல்

ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கும் போது சிறய மரங்கள் சாயும் வாய்ப்புள்ளன. அதி தீவிர கனமழை பெய்யும் என்பதால் சென்னையில் தண்ணீர் தேங்க வாய்ப்புள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 90 கிமீ வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Dont come out IMD Warn to chennai

இதனால் சென்னை மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என IMD எச்சரித்துள்ளது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

  • Pushpa 2 Kissik song வசனமடா முக்கியம்…ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த புஷ்பா 2 “கிஸ்ஸிக்” பாடல் வீடியோ இதோ…!
  • Views: - 125

    0

    0