பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான புகார் மீது உடனடி நடவடிக்கை : கோவை மாவட்ட புதிய எஸ்.பி பத்ரிநாராயணன் உறுதி!!

Author: Udayachandran RadhaKrishnan
24 March 2022, 1:35 pm

கோவை : பெண்கள் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று கோவை மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுள்ள பத்ரிநாராயணன் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த செல்வநாகரத்தினம் சென்னை போலீஸ் பயிற்சி பள்ளி துணை இயக்குனராக பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.

இதனை தொடர்ந்து கன்னியாகுமாரி மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளராக இருந்த பத்ரிநாராயணன் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.

தொடர்ந்து இன்று கோவை வந்த பத்ரி நாராயணன் கோப்புகளில் கையெழுத்திட்டு புதிய காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

இதை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது : கோவை மாவட்ட கண்காணிப்பாளராக இன்று பொறுப்பேற்றுள்ளேன். மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு சிறந்த முறையில் கடைபிடிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்

முக்கியமாக பெண்கள் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் முன்னுரிமை அளிக்கப்படும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆண்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

கோவை மாவட்டத்தில் போதை பொருட்கள் முற்றிலுமாக தடுக்கப்பட்டு போதைப்பொருள் கலாச்சாரத்தால் இளைஞர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளேன். வழக்குகள் நிலுவையில் இருந்தால் அதை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

  • Popular Actress Complaint Against Actor Arya நடிகர் ஆர்யா மீது பிரபல நடிகை பரபரப்பு புகார்.. காசு வாங்கும் போது தெரியலையோ?