சிஏஏ சட்டம் அமல்.. பாஜகவின் சந்தர்ப்பவாத அரசியல் : மக்கள் பாடம் புகட்டுவார்கள்.. கே.பி முனுசாமி அட்டாக்!

Author: Udayachandran RadhaKrishnan
12 March 2024, 2:21 pm

சிஏஏ சட்டம் அமல்.. பாஜகவின் சந்தர்ப்பவாத அரசியல் : மக்கள் பாடம் புகட்டுவார்கள்.. கே.பி முனுசாமி அட்டாக்!

கிருஷ்ணகிரியில் அதிமுக சார்பில், தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி ஐந்து ரோடு ரவுண்டானா அருகே நடைபெற்ற இந்த மனித சங்கிலி போராட்டத்தில் அதிமுக துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ., கலந்து கொண்டார்.

போராட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கே.பி. முனுசாமி..
எளிதில் போதைப்பொருள் கிடைக்கும் மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது.
கடந்தாண்டு சட்டமன்றத்தில் அரசு சார்பில் வெளியிடப்பட்ட கொள்கை விளக்க குறிப்பில் போதை பொருள் தடுப்பு தொடர்பாக 2,438 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 145 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என முதல்வர் தெரிவித்தார்.

போதைப்பொருள் வழக்கில் தொடர்புடைய மற்றவர்கள் கைது செய்யப்படவில்லை. அவர்கள் திமுகவை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும், இல்லையென்றால் திமுகவினருக்கு வேண்டியவர்களாக இருக்க வேண்டும்.

அந்த அடிப்படையில் தான் போதை பொருள் இந்த அளவில் பரவியுள்ளது அதற்கு இந்த ஆட்சியாளர்கள் தான் காரணம். ஒரு துளி போதை பொருள் கூட இல்லாத அளவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் அவ்வாறு நடவடிக்கை எடுக்காத அரசு தாங்களாக விலகிக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

சி ஏ ஏ சட்டம் அமல்படுத்த அதிமுக அளித்த ஆதரவு காரணம் என முதல்வர் தெரிவித்ததற்கு பதில் அளித்த முனுசாமி .. முதல்வர் ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டது. நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் என்ற சூழல் வந்த காரணத்தினால் எல்லா குற்றச்சாட்டுகளையும் அதிமுக மீது சுமத்துகிறார்.

சி ஏ ஏ சட்டம் வந்தவுடன் எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக மத்திய அரசை விமர்சித்து உள்ளார். மக்களை பிளவுபடுத்த இந்த அரசு முயற்சி செய்து கொண்டிருக்கிறது என கடுமையாக விமர்சித்துள்ளார்.

சிஏஏ சட்டத்தை ஆதரித்த 13 எம்பிக்கள் யார் என கூற வேண்டும். அதிமுக குறித்து சொல்ல ஸ்டாலினுக்கு எந்தவித தார்மீக உரிமையும் இல்லை
பாஜக அரசின் ஐந்தாண்டு காலம் அமைச்சர் பதவியை அனுபவித்தவர்கள் அதனால் மத்திய அரசையோ, அதிமுகவையோ விமர்சிக்க அவர்களுக்கு எந்தவித தார்மீக உரிமையும் இல்லை என்றார்.

சி ஏ ஏ சட்டம் அமல்படுத்துவது மூலம் எப்படியாவது மூன்றாவது முறை ஆட்சிக்கு வர வேண்டுமென பாஜக செய்யக்கூடிய சந்தர்ப்பவாதம் அரசியல் இது.

இந்த சந்தர்ப்பவாதிகளுக்கு மக்கள் வழங்கும் தீர்ப்பு நல்ல பாடத்தைப் புகட்டும் என தெரிவித்த முனுசாமி, நேர்மையான லஞ்ச லாவண்யம் இல்லாத ஒழுக்கமான அப்பழுக்கற்றவர்கள் என்று கூறிக் கொள்ளும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி ஏன் தேர்தல் பத்திரத்தை உடனடியாக வெளியிட தயங்குகிறது. வங்கி ஒரு மணி நேரத்தில் தேர்தல் பத்திரத்தை வழங்கக்கூடிய தொழில் நுட்பங்கள் வந்துவிட்டது. இந்த சூழலில் ஜூன் மாதம் வரை அவகாசம் கேட்கிறார்கள் என்றால் அங்கு மிகப் பெரிய தவறு நடந்துள்ளது என்பது தான் எதார்த்தமான உண்மை என்றார்.

எங்களை எப்படியாவது அவர்கள் பக்கம் இழுக்கலாம் என முயற்சி செய்கிறார்கள் நாங்கள் சுயமரியாதை இயக்கத்தில் இருந்து வந்தவர்கள். நாங்கள் சுயமரியாதையுடன் நின்று கொண்டிருப்பதால் இது போன்ற வழக்குகள் யாரால் தொடுக்கப்படுகிறது என்று எங்களுக்கு தெரியும் அதை முறையாக எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம் என இரட்டை இலை தொடர்பான வழக்கு குறித்த கேள்விக்கு பாஜகவை மறைமுகமாக சாடினார்.

சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட சின்னமும் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட பொதுச் செயலாளர் இருக்கக்கூடிய சூழலில் இதுபோன்ற வழக்கு தொடுக்க ஏவி விட்டவர்களின் எண்ணம் பலிக்காது. இரட்டை இலை சின்னம் குறித்து தேர்தல் ஆணையம் நோட்டீஸ் வழங்கியது குறித்து கே.பி.முனுசாமி பதில்

ஆயிரம் ரூபாய் பிச்சை போட்டால் மக்கள் வாக்களித்து விடுவார்களா என குஷ்பூ பேசியதற்கு கண்டனம் தெரிவித்த முனுசாமி ஏழ்மை நிலையில் உள்ள அடித்தட்டு மக்களுக்கு கொண்டுவரக்கூடிய திட்டங்களை குஷ்பூ பிச்சை போடுகிறது என கூறுகிறார் அதை வருத்தத்துடன் கண்டிக்கிறேன் என்றார்.

கீழ் நிலையில் இருக்கின்ற மக்களை தூக்கி விடுவதற்காக கொண்டு வர கூடிய திட்டங்களை விமர்சிப்பது அவர்களுடைய அறியாமை என்றார்.

அதிமுக அழிவு நிலையில் உள்ளதாக மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் சமீபத்தில் நடந்த பாஜக பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பேசியதை குறிப்பிட்டு பேசிய முனுசாமி..

வட மாநிலங்களில் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்றவாறு சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு வருவார்கள். மேற்கு வங்கத்தில் அவ்வாறு பாஜகவிற்கு வந்தவர்கள் தேர்தல் முடிந்த உடன் மீண்டும் திரிணாமுல் காங்கிரசுக்கு சென்று விட்டனர்.

வட மாநிலத்தில் சந்தர்ப்பத்திற்கு அரசியல் செய்பவர்கள் உதாரணமாக சிவராஜ் சிங் சவுகான் முதல்வர் பதவி கொடுக்கவில்லை என்பதால் யார் காலிலும் விழ மாட்டேன் என தெரிவித்தார் தற்பொழுது நாடாளுமன்ற சீட் வழங்கியதும் பாஜகவிற்கு துதி பாடுகிறார்.

அதிமுகவில் இருப்பவர்களுக்கு கடைசிவரை பதவி கிடைக்கவில்லை என்றாலும் கொடி ஏந்தி மரணிப்பவர்கள் தான் அதிமுகவினர் என தெரிவித்தார்.

  • ajith offers siruthai siva the next film but siva refused என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!