Categories: தமிழகம்

பட்ஜெட்டில் தமிழகத்திற்கு முக்கியத்துவம்.. அண்ணாமலை சொன்ன ஹேப்பி நியூஸ்!!

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள குஜராத் சமாஜ் மண்டபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தேர்தல் பணிகள் மேற்கொண்ட தன்னார்வலர்களுக்கான பாராட்டு மற்றும் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை< வரும் சட்டமன்ற தேர்தலில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும் எடுத்துரைத்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தவர், மின் கட்டண உயர்விற்கு மத்திய அரசின் உதய் திட்டத்தை குறை சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், மாநிலத்தின் வளர்ச்சிக்கான அம்சங்கள் வரும் மத்திய பட்ஜெட்டில் இடம்பெறும் எனவும் தெரிவித்தார்.மேலும் திமுகவில் உள்ள குற்றப் பின்னணி கொண்ட நபர்கள் குறித்த அறிக்கையையும் அண்ணாமலை வெளியிட்டு பேசினார்.

செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசியதாவது, ‘பாஜகவின் மூன்றாவது ஆட்சியின் மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் அவர்கள் தாக்கல் செய்ய உள்ளார். 2047 ஆம் ஆண்டில் இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக உருவாக்குவதற்கான அம்சங்கள் மத்திய பட்ஜெட்டில் இடம் பெறும். தமிழகத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டும் இந்த பட்ஜெட்டில் முக்கிய அம்சங்கள் வரும் என எதிர்பார்க்கின்றோம்.
ஜி எஸ் டி குறித்து பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கருத்துக்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு ஜிஎஸ்டி வரி வருவாய் கடந்த ஆண்டு விட அதிகமாகவே வசூல் ஆகியுள்ளது. அனைத்து தரப்பினரின் கோரிக்கையை ஏற்று ஜிஎஸ்டி குறித்த சுமூக முடிவுகள் எடுக்கப்படும்.

தமிழகத்தில் சிறு குறு நிறுவனங்கள் மின்சார கட்டண உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மின்சார கட்டண உயர்விற்கு மத்திய அரசின் உதய் திட்டத்தை குறை சொல்வதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. பிற மாநிலங்களின் மின் கட்டணத்தை ஒப்பிட்டு பேசுவது சரியான ஒப்பீடு அல்ல.குறிப்பாக திமுக அரசு தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்த மாதந்தோறும் மின்கட்டணம் வசூல் செய்யும் திட்டத்தினை அமல்படுத்த வேண்டும்.

இரண்டு மாதத்திற்கு சேர்த்து மின்கட்டணம் வசூலிப்பதால் அதிக அளவு மின் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. இது பொதுமக்கள் மற்றும் தொழில் நிறுவனங்களை பெருமளவு பாதிக்கின்றது. மின்கட்டணத்தை உயர்த்த வேண்டும் என மாநிலத்தை எந்த விதத்திலும் மத்திய அரசு வலியுறுத்த வில்லை. மத்திய அரசின் விவசாய நிதி உதவி திட்டத்தில் தமிழகத்தில் பெரும் அளவு முறைகேடு நடந்துள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க தமிழக பாஜகவின் விவசாயப் பிரிவு சார்பில் குழு அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

வரும் பட்ஜெட்டில் கோவை ரயில் நிலையம் மேம்படுத்துவதற்கான அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கிறோம். மாநில பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற அந்த துறையின் மத்திய அமைச்சர்களிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம். மத்திய உள்துறை அமைச்சர் அவர்களை கோவைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். கோவையில் பாஜகவின் கட்சி அலுவலக திறப்பு விழாவில் அவர் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
குற்றப் பின்னணி கொண்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது அந்தந்த கட்சியினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்களை பாஜக நீக்கி உள்ளது. அது எங்களின் கடமையாகும்.
கட்சியில் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது குறித்த தகவல்களை மாநில தலைமைக்கு தெரிவிக்க வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மாவட்ட தலைமையின் அதிகாரமும் எந்த விதத்திலும் பாதிக்கப்படாது. இதற்கான புதிய நடைமுறையை பாஜக அமல்படுத்த உள்ளது.

திமுகவில் உள்ள குற்ற பின்னணி கொண்டவர்கள் குறித்த அறிக்கையை இன்று வெளியிடுகிறேன். இதில் சுமார் 112 பேர் முக்கிய குற்றங்களில் ஈடுபட்டவர்களாக பட்டியலிடப்பட்டுள்ளனர். மொத்தம் 18 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில் திமுக பிரமுகர்களின் பெயர், புகைப்படம் மற்றும் ஆதாரத்தோடு உள்ளது. போதைப் பொருள் கடத்தல், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் தொடர்புடையவர்கள், காவல்துறையினரை தாக்கியவர்கள், அரசியல் கொலையில் சம்பந்தப்பட்டவர்கள், வணிகர்களிடம் பணம் பெற்றவர்கள் என பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட திமுகவினர் குறித்த அறிக்கை இது’ என தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தவர்,’ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கினை சிபிஐ இடம் மாற்ற முதல்வர் உத்தரவிட வேண்டும். அமைச்சர் உதயநிதி துணை முதல்வராக ஆகும்போது திமுகவின் நிலைமையை மக்களே அறிந்து கொள்வார்கள்.

2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி குறித்து திருச்சியில் நடந்த மாநாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் தெளிவாக கூறியுள்ளனர்.ராமருக்கு செருப்பு மாலை போட்ட இயக்கத்தை பின்பற்றி வந்த திமுக இன்று சமத்துவத்தையும், சமூக நீதியையும் பேசியது ராமர் காலம் என கூறி உள்ளது. இதைதான் நாங்களும் ராமராஜ்ஜியம் என்கிறோம். இது குறித்த சட்ட அமைச்சரின் கருத்து ராமருக்கு செருப்பு மாலை இட்டதற்கு மக்களிடம் மன்னிப்பு கேட்கும் கருத்தாகவே பார்க்கிறோம்.

பங்களாதேஷில் ஏற்பட்டுள்ள பதட்டமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மக்களை மீட்கும் பணியில் மத்திய வெளி உறவு அமைச்சகம் ஈடுபட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. திமுக அமைச்சர் சென்னை விமான நிலையத்தில் அவர்களை வரவேற்கும் பணியினை மட்டுமே செய்து வருகின்றனர்.

சமஸ்கிருதத்திற்கு மட்டும் அதிக நிதி ஒதுக்குவதாக சொல்லும் கருத்தினை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்தியாவில் உள்ள சமஸ்கிருத, ஹிந்தி மற்றும் தமிழ் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை அடிப்படையிலேயே நிதி ஒதுக்கப்படுகிறது. அந்த வகையில் ஹிந்தி மற்றும் சமஸ்கிருத பல்கலைக்கழகங்கள் அதிகமாக இருப்பதால் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழிக்கான பல்கலைக்கழகங்களை அதிகமாக உருவாக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என அண்ணாமலை தெரிவித்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

மனைவிக்கு அறிமுகமான நபர்.. கணவரும் சேர்ந்து செய்த செயல்.. சென்னையில் பரபரப்பு சம்பவம்!

சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…

11 hours ago

தோல்வியில் இருந்து உதித்து எழப்போகும் கங்குவா இயக்குனர்? அடுத்த படத்துக்கு ரெடி ஆகும் சிறுத்தை சிவா! அதுவும் இந்த நடிகர் கூட?

படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…

12 hours ago

2 மாதங்களாக கோவை சிறையில் விலகாத மர்மம்.. போலீசார் முக்கிய நகர்வின் பின்னணி!

கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…

12 hours ago

தனுஷிற்கு எதிராக அறிக்கை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்! மேலிடத்தில் இருந்த வந்த உத்தரவு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…

தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…

13 hours ago

Uff… அந்த இடுப்பு இருக்கே : படுகிளாமரில் கீர்த்தி சுரேஷ்!

Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…

13 hours ago

புதிய தமிழக பாஜக தலைவர்.. மூத்த பிரமுகர் கொடுத்த Hint.. பரபரக்கும் தலைமை!

ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…

13 hours ago

This website uses cookies.