பாஜகவினருக்கு முக்கிய Assignment..ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடிக்கும் அண்ணாமலை!!

Author: Udayachandran RadhaKrishnan
1 September 2023, 8:48 pm

பாஜகவினருக்கு முக்கிய Assignment..ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடிக்கும் அண்ணாமலை!!

சென்னையில் பாஜக இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்க வருமாறு பாஜக மாவட்ட தலைவர்களை அழைத்த அண்ணாமலை சிலிண்டர் விலை குறைப்பில் மத்திய அரசின் பங்கு பற்றி விரிவாக பேசியிருக்கிறார்.

சமூக் வலைதளங்களிலும், கிராமப்புறங்களிலும் இதனை நிர்வாகிகள் கொண்டு செல்ல வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். அதேபோல் கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு பிரதமர் மோடி என்னவெல்லாம் செய்திருக்கிறார் என்பது குறித்தும் நிர்வாகிகள் ஆர்வமுடன் பரப்புரை செய்யாததை சுட்டிக்காட்டி அதிலும் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார்.

இதனிடையே காங்கிரஸ் ஆட்சியில் 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சிலிண்டரை 1200 ரூபாயாக அதிகரித்து அதில் 200 ரூபாய் குறைப்பதில் என்ன ஆச்சரியம் என திமுகவினரும், காங்கிரஸ் கட்சியினரும் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

இதற்கு உரிய பதிலடி கொடுப்பதற்கு சமூக வலைதள நிர்வாகிகளுக்கு ஐடியாக்கள் வழங்கியுள்ளார் அண்ணாமலை. இதனால் இனி வரும் நாட்களில் சமூக வலைதளங்களில் கருத்து யுத்தம் பலமாக இருக்கும் எனத் தெரிகிறது

  • திடீரென மொட்டையடித்த சுந்தர்.சி.. ரூ.1 லட்சம் நன்கொடை.. விறுவிறுப்படையும் மூக்குத்தி அம்மன் 2!