விஜய் எடுக்கும் முக்கிய முடிவு… நாளை கூடுகிறது தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் கூட்டம் : முக்கிய அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
18 February 2024, 12:13 pm

விஜய் எடுக்கும் முக்கிய முடிவு… நாளை கூடுகிறது தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் கூட்டம் : முக்கிய அறிவிப்பு!!

நடிகர் விஜய் ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற கட்சியை தொடங்கினார். கட்சி தொடங்கிய அறிவிப்பை கடந்த 2-ம் தேதி விஜய் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதும் கட்சியின் கொடி, சின்னம் அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே, கட்சி பெயரில், ‘க்’ விடுபட்டுள்ளதாக தமிழ் ஆர்வலர்கள் பலரும் சுட்டிக்காட்டிய நிலையில், கட்சியின் பெயரில் ‘க்’ சேர்த்து ‘தமிழக வெற்றிக் கழகம்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாளை நடக்க உள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவரின் உத்தரவின் பேரில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் உட்கட்சிக் கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னை, பனையூரில் உள்ள தலைமை நிலையச் செயலக அலுவலகத்தில் நாளை (19.02.2024, திங்கட்கிழமை) காலை 9.00 மணி அளவில் நடைபெற உள்ளது. நமது கழகத்தின் மாவட்டத் தலைமை நிர்வாகிகள் இக்கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!