ஐடி ரெய்டில் முக்கிய ஆவணங்கள் சிக்கியது… நெருக்கடியில் பிரபல ரியல் எஸ்டேட் தொழிலதிபர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
15 February 2023, 12:20 pm

வரி ஏய்ப்பு செய்ததாக தொழில் அதிபர்களின் அலுவலகம் மற்றும் வீடுகளில் நேற்று காலை முதல் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அந்த வகையில் வேலூர் மாநகருக்குட்பட்ட தியாகராஜபுரம் பகுதியில் உள்ள பூபாலம் ராஜசேகரன் என்பவரது இடத்திலும், அதேபோல் அம்பாலால் குழுமபத்திற்கு சொந்தமான இடங்களான, வேலூரில் உள்ள அம்பாலால் கிரீன் சிட்டி, VIP சிட்டி, அம்பாலால் உரிமையாளர் ஜவுரிலால் ஜெயினுக்கு சொந்தமான ரியல் எஸ்டேட், எலக்ரானிக், வீட்டு உபயோக பொருட்கள், வில்லாஸ் குடியாத்தம் நகை கடை பஜார், சந்தைபேட்டை பகுதிகளில் உள்ள அம்பாலால் குழுமத்திற்கு சொந்தமான கடை, வீடு, அலுவலகம் ஆகிய பகுதிகளிலும், வேலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள வீட்டு உபயோக பொருட்கள் கடையிலும், வேலூர் ஓல்ட் பைபாஸ் சாலையில் உள்ள அம்பலால் குழுமத்திற்கு சொந்தமான விஐபி சிட்டி அலுவலகத்திலும் வருமானவரித்துறை சோதனை மேற்கொண்டனர்.

அதேபோல காட்பாடி அடுத்த விருதம்பட்டு பகுதியில் உள்ள நூறாம் நம்பர் பீடி கம்பெனியிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.

சென்னை, வேலூர், திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் சேர்ந்த அதிகாரிகள் இச்சொதனையில் ஈடுபட்டனர். சுமார் காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த சோதனையானது 13 மணி நேரம் கடந்த நிலையில் தற்போது முடிவடைந்துள்ளது.

இதில் சொத்து சம்பந்தமான ஆவணங்கள் வங்கி பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள் உள்ளிட்டவை போன்ற முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

  • Annamalai vs Cool Suresh Whip Trendஅண்ணாமலையை தொடர்ந்து கூல் சுரேஷ் சாட்டையடி… வைரலாகும் வீடியோ..!
  • Views: - 653

    0

    0