விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு… மேட்டூர் அணையில் உடனே தண்ணீர் திறக்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு!

Author: Udayachandran RadhaKrishnan
28 ஜூலை 2024, 3:20 மணி
CM
Quick Share

இன்று காலை மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நீர்வளத்துறை செயலாளர் மணிவாசகன், மேலும் மாவட்ட ஆட்சியர்கள் கலந்து கொண்டனர்.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் எப்போது தண்ணீர் திறப்பது, அவ்வாறு தண்ணீர் திறக்கப்பட்டால் எடுக்கப்பட வேண்டிய பல்வேறு நடவடிக்கைகள் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் விரிவாக ஆலோசனை மேற்கொண்டார்.

இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, ‘மேட்டூர் அணைக்கு வருகின்ற நீரினை செம்மையாகப் பயன்படுத்தும் வகையில் இன்று (28-07-2024) மாலை 3 மணியளவில் மேட்டூர் அணை திறப்பதற்கு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். அதன்படி முதற்கட்டமாக, 12 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட உள்ளது. அதன்பிறகு நீர் வரத்தைப் பொறுத்து படிப்படியாக உயர்த்தப்படவுள்ளது.

இதற்கான முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு நீர் திறந்துவிடப்படும் எனவும், இந்த நீரை விவசாயிகள் நல்ல முறையில் பயன்படுத்தவும், ஏரிகள் மற்றும் குளங்களில் நீரை சேமித்து வைக்கவும், நிலத்தடி நீரை செறிவூட்டவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் பல்வேறு துறை அலுவலர்களுக்கு முதலவர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார்.

  • ரூ.411 கோடி அரசு நிலம் அபேஸ்? அறப்போர் இயக்கம் கைகாட்டும் அமைச்சர்!
  • Views: - 199

    0

    0