கிரிக்கெட் வீரருக்கு பாஜகவில் முக்கிய பதவி… அண்ணாமலை வெளியிட்ட அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
1 June 2023, 1:57 pm

கிரிக்கெட் வீரருக்கு பாஜகவில் முக்கிய பதவி… அண்ணாமலை வெளியிட்ட அறிவிப்பு!!

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளராக இருந்தவர் லஷ்மண் சிவராம கிருஷ்ணன் (வயது 57) இந்திய கிரிக்கெட் அணிக்காக 9 டெஸ்ட் மற்றும் 16 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் சர்வதேச அளவில் விளையாடி உள்ளார்.

இவர் மொத்தம் 41 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். கடந்த 23 ஆண்டுகளாக கிரிக்கெட் போட்டிகளில் வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார். இந்த கடந்த கடந்த சில வருடங்களுக்கு முன்பாக தன்னை பாஜகவில் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் இணைத்துக்கொண்டார்.

இந்தநிலையில் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணனுக்கு விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவின் கெளரவ துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பாஜக விளையாட்டு பிரிவு தலைவர் அமர் பிரசாத் ரெட்டி வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை மற்றும் பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் அவர்கள், தமிழ்நாடு பாரதீய ஜனதா கட்சியின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவின் கெளரவ துணைத் தலைவராக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் அவர்களை நியமிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட்டுக்கு உங்களின் சிறப்பான பங்களிப்பும், விளையாட்டை ஊக்குவிப்பதில் உங்கள் அசைக்க முடியாத அர்ப்பணிப்பும் மிகவும் பாராட்டத்தக்கது.

ஒரு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரராக உங்கள் அனுபவம் பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு ஆகியவற்றின் முயற்சிகளை பெரிதும் மேம்படுத்தும் என்று நாங்கள் உறுதியாக நம்புவதாக தெரிவித்துள்ளவர், உங்கள் பாரம்பரியம் வரவிருக்கும் தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கும் என அமர் பிரசாத் ரெட்டி தெரிவித்துள்ளார்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!