முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் : மன்னிப்பு கேட்ட காப்பீட்டு நிறுவனம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
13 June 2023, 1:38 pm

இந்தி திணிப்பு… முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் : மன்னிப்பு கேட்ட காப்பீட்டு நிறுவனம்!!!

நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் காப்பீட்டு நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் இந்தியில் இருந்ததை அடுத்து தமிழகத்தில் பல்வேறு அரசியல் தலைவர்கள் உட்பட, முதல்வர் ஸ்டாலின் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

இந்தி திணிப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனம் ட்விட்டரில் மன்னிப்பு கோரி பதிவிட்டுள்ளது.

காப்பீட்டு நிறுவனம் தனது ட்விட்டர் பதிவில், நாங்கள் அனைத்து மாநில மொழிகள் மற்றும் கலாச்சாரத்தை மதித்து வருகிறோம். பரந்து விரிந்த மற்றும் பல்வேறுபட்ட இந்தியாவின் அனைத்து மொழிகளையும், அதன் உயர்ந்த பண்பாட்டிற்கும் மரியாதை அளித்து வருகிறோம், தவறுதலாக நாங்கள் இதனை காயப்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என்று பதிவிட்டுள்ளது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி