அரிசிக்கு வரி விதிப்பது கொடுமையிலும் கொடுமை : திட்டம் போட்டு ஏமாத்தறாங்க.. கொந்தளித்த வணிகர் சங்க பேரவைத் தலைவர் வெள்ளையன்!!

Author: Udayachandran RadhaKrishnan
16 August 2022, 9:55 am

அரிசிக்கு வரி மத்திய மாநில அரசுகள் திட்டமிட்டு மக்களை ஏமாற்றுகிறது., ஆனால் அரிசிக்கு வரி விதிப்பது என்பது கொடுமையானது என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் தெரிவித்தார்.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் தமிழ்நாடு வணிகர் சங்கம் சார்பில் தேர்வில் முதலிடம் பிடித்த 12ஆம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் த.வெள்ளையன் பேசுகையில் புகையிலைப் பொருட்களை விற்கும் வியாபாரிகளை நாங்கள் வியாபாரிகளாக கருதுவது கிடையாது. அப்படி விற்பனை ஏதும் நடைபெற்றால் அதை தடுப்பதற்கு வணிகர் சங்கம் முயற்சி எடுக்கும்.

அரிசிக்கு வரி காலகாலமாக இல்லாமல் இருந்தது. என்றும் அதை நாங்கள் எதிர்ப்போம் மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, சமையல் எரிவாயு உயர்வு போன்றவற்றை வணிகர் சங்க பேரவை எதிர்க்கும்.

வரிவிதித்தால் மக்களுக்கு சலுகைகள் செய்ய முடியும். ஆனால் அரிசிக்கு வரி என்பது கொடுமையானது என்றும் இதில் மத்திய மாநில அரசுகள் திட்டம் போட்டு செயல்படுகிறது
மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தை போன்று அமைதியான முறையில் காந்திய வழியில் தீவிரப் போராட்டம் வணிகர் சங்கம் சார்பில் நடைபெறும் எனவும் தெரிவித்தார்.

  • Angadi Theru actor Mahesh career அட இதெல்லாம் இவர் நடிக்க இருந்த படமா…கைக்கு வந்த வாய்ப்பை தவற விட்டு தவிக்கும் அங்காடித்தெரு ஹீரோ…!