15 மாசத்துல கலைஞர் மருத்துவமனை கொண்டு வந்தோம்.. ஆனா அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ்? தொண்டர்களுக்கு CM கடிதம்!!
Author: Udayachandran RadhaKrishnan18 June 2023, 3:30 pm
தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அவ்வப்போது, திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதுவது வழக்க்கமான ஒன்று. அதே போல , தற்போது மறைந்த முன்னாள் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், கிண்டி பல்நோக்கு மருத்துவமனை பிப்ரவரி 2022இல் அடிக்கல் நாட்டப்பட்டு, 15 மாதங்களில் 6 மாடி கட்டடம், 1000 படுக்கைகள் கொண்ட அதிநவீன கலைஞர் மருத்துவமனை இந்த மாதம் (ஜூன் 2023இல்) துவங்கப்பட்டு விட்டது.
அதே போல மதுரையில்… என இடைவெளி விட்டு, அது உங்களுக்கே தெரியும் என இன்னும் கட்டப்படாத மதுரை எய்ம்ஸ் பற்றி மறைமுகமாக குறிப்பிட்டார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின.