காய்கறிகளை பதப்படுத்தும் நிலையத்தை ஆக்கிரமித்த ‘குடி’மகன்களால் இடையூறு.. குமுறும் விவசாயிகள்..!

Author: Vignesh
3 July 2024, 5:12 pm

ஆரணியில் விவசாயிகளின் காய்கறிகளை பதப்படுத்த 4 கோடி 20 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட நிலையம் மது அருந்தி செல்லும் இடமாக மாறிய அவலம் ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ஆரணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் அதிக அளவில் கீரைகள் மற்றும் காய்கறி உள்ளிட்ட தோட்ட பயிர்களும் தர்பூசணி, மாம்பழம், வாழை உள்ளிட்டவைகளை விவசாயிகளிடமிருந்து நேரடியாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யும் முக்கிய மையமாக விளங்குகிறது.

இந்த நிலையில், விவசாயிகளின் பல ஆண்டு கோரிக்கையை ஏற்று அப்பகுதியில் காய்கறி மற்றும் பழங்களை பதப்படுத்தும் வகையில் தமிழக அரசால் சுமார் 4 கோடி 20 லட்ச ரூபாய் மதிப்பில் காய்கறிகள் பதப்படுத்தும் நிலையம் அமைக்கப்பட்டது நாள்தோறும் 20 டன் காய்கறி பழம் வரை அப்பகுதியில் விற்பனை செய்யப்படுவதால் விளைச்சல் அதிகமான காலங்களில் அதனை பதப்படுத்தி விற்பனை செய்வதற்காக அமைக்கப்பட்டு திறக்கப்பட்ட நிலையில் விவசாயிகளின் பயன்பாட்டிற்கு வராமலேயே அந்த நிலையம் பதப்படுத்தப்படும் குளிரூட்டும் அரை மின்விசிறி மின்னணு சாதனங்கள் உள்ளிட்டவை சேதப்படுத்தப்பட்டு பல பொருட்கள் திருடப்படும் உள்ளது.

மேலும், நிலையத்தில் அனைத்து இடங்களிலும் மதுபான விடுதியை போன்று மதுபானங்கள் அருந்திவிட்டு அங்கேயே வீசி உடைத்துவிட்டு செல்லும் நிலையில் உள்ளது காவலாளிகள், நிலையத்தை பராமரிக்க தேவையான ஊழியர்கள் ‘சிசிடிவி’ கேமரா போன்ற வசதிகள் செய்யப்படாததால், இங்குள்ள குளிர்சாதன இயந்திரங்கள், ஜெனரேட்டர் உள்ளிட்டவைகளும் பாதுகாப்பற்ற முறையில் உள்ளது வேளாண்துறை வணிக பிரிவினர் முதன்மை பதப்படுத்தும் நிலையத்தை முறையாக விவசாயிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் காலம் தாழ்த்தியதால் தற்போது இந்த நிலையும் முற்றிலும் வீணாகிப் போனது தொடர்ந்து இதனை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர பல லட்சம் செலவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

வேளாண் துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் உரிய பராமரிப்பின்றி காய்கறிகள் பதப்படுத்தும் நிலையம் மது பிரியர்களின் மது அருந்தும் இடமாக மாறியுள்ளது பார்ப்பதற்கே வேதனை அளிக்கும் விதமாக உள்ளது.

  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…
  • Close menu