மிட் நைட்டில் சைக்கிளில் ரவுண்ட்ஸ்…ரோந்து காவலர்களுக்கு ஷாக் கொடுத்த பெண் ஐபிஎஸ் அதிகாரி: பாராட்டிய முதலமைச்சர் ஸ்டாலின்..!!

Author: Rajesh
26 March 2022, 1:06 pm

சென்னை: சென்னை மாநகராட்சி வடக்கு மண்டல இணை ஆணையர் ரம்யா பாரதி நள்ளிரவில் சைக்கிளில் ரோந்து பணி மேற்கொண்டதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Image

தமிழகத்தில் நாளுக்கு நாள் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் சென்னை காவல்துறை வடக்கு மண்டல இணை ஆணையர் ரம்யா பாரதி தனது கட்டுப்பாட்டுக்குள் உள்ள பகுதியில் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டு ரோந்து காவலர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார்.

Image

இரவு நேரத்தில் காவல்துறை வாகனங்களில் சென்று ரோந்து பணியில் ஈடுபடுவதை விட சைக்கிளில் ரோந்து பணி செல்ல திட்டமிட்டு, நேற்று இரவு சாதாரண உடையில் சைக்களில் பயணம் மேற்கொண்டார். இந்த ரோந்து பணியின் போது இரவு காவலர்களின் செயல்பாடுகளை கண்காணிக்கவும் திட்டமிட்டார்.

இதற்காக திடீரென சைக்களில் புறப்பட்ட அவர் தனது கட்டுப்பாட்டுக்குட்பட்ட 8 காவல்நிலையத்தை 9 கிலோ மீட்டர் தூரத்திற்கு சைக்களில் சென்று ஆய்வு செய்தார். அதிகாலை 2.45 மணிக்கு வாலாஜா சாலையில் தொடங்கி முத்துசாமி பாலம், ராஜா அண்ணாமலை மன்றம், குறளகம் வால் டாக்ஸ் சாலை, வழியாக சென்றவர், அதிகாலை 4.15 மணிக்கு ஸ்டான்லி சுரங்கப்பாதையில் தனது ரோந்து பணியை முடித்தார்.

Image

அப்போது காவல் ரோந்து வாகனம் மற்றும் காவல்நிலையங்களில் பதிவேடுகளையும் ஆய்வு செய்தார். இரவு நேரத்தில் நடைபெறுகின்ற சட்ட ஒழுங்கு பிரச்சனை மற்றும் இரவு நேர அவசர அழைப்புகளுக்கு காலவர்களின் செயல்பாடுகளையும் ஆய்வு செய்தார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த இணை ஆணையர் ரம்யா பாரதி, இரவு நேரத்தில் சைக்களில் ரோந்து மேற்கொண்டது புதுவகையான அனுபவமாக இருந்ததாக தெரிவித்தார். பெண் இணை ஆணையரின் இரவு ரோந்து தொடர்பாக படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானதையடுத்து காவல் துறை உயர் அதிகாரிகள் ரம்யா பாரதியை பாராட்டி வருகின்றனர்.

Image


இந்தநிலையில் துபாய் பயணம் மேற்கொண்டிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் இந்த தகவல் கேள்விபட்டு,ரம்யா பாரதியை பாராட்டி ட்வீட் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் ‘பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை குறைக்கவும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டு உள்ளேன். தமிழக போலீஸ் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்துவதில் இரும்புக்கரம் கொண்டு செயல்படும்’ என முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

  • TTF Vasan Viral Instagram Video இளம் நடிகையுடன் உல்லாச பயணம்…ஹெல்மெட் போடாமல் சென்ற TTF வாசன்..!
  • Views: - 1708

    0

    0