பொம்பள கைய புடிச்சு இழுக்கும்போது விட்ருங்க.. போட்டோ எடுக்க வந்துருவீங்க.. பெண்ணிடம் அத்துமீறிய மதுபோதை ஆசாமி..!
Author: Vignesh21 August 2024, 12:19 pm
கோவையில் பெண் வழக்கறிஞர்களிடம் அத்துமீற முயன்ற மதுபோதை ஆசாமி : பெண்களை கையை பிடித்து இழுப்பதை வீடியோ எடுக்காமல் இதை எடுக்கிறியா ? செய்தியாளர்களிடம் அடாவடியில் காவல் துறை ஈடுபட்டனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பெண் வழக்கறிஞர்கள் இருவர் ஸ்டேட் பேங் சாலை வழியாக வந்து கொண்டு இருந்த போது, அவர்களை பின் தொடர்ந்த மதுபோதை ஆசாமி பெண் வழக்கறிஞர்களிடம் அத்துமீற முயன்றதாக தெரிகிறது. இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பணியில் இருந்த போலீசாரிடம் பெண் வழக்கறிஞர்கள் இது குறித்து தெரிவித்த நிலையில் போலீசார் அந்த மர்ம நபரை பிடித்து விசாரித்து வந்தனர்.
இதை வீடியோ எடுத்த செய்தியாளரிடம் வீடியோ பதிவு செய்ய விடாமல் தடுத்ததுடன், பெண்களை கையை பிடித்து இழுப்பதை வீடியோ எடுக்காமல் ? போலீசார் விசாரிப்பதை வீடியோ எடுப்பதா ? என்று கூறி பெண் வழக்கறிஞரை பின் தொடர்ந்து வந்த மதுபோதை ஆசாமியை போலீசார் தப்ப விட்டனர்.
மேலும், இதுகுறித்து காவல்துறை தரப்பில் கேட்டதற்க்கு காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரிப்பதாக தெரிவித்து உள்ளனர்.அரசு மருத்துவமனையில் பெண் மருத்துவரிடம் அத்துமீறலில் ஈடுபட முயன்ற வடமாநில இளைஞர் பரபரப்பு அடங்கும் முன்பாக தற்பொழுது பெண் வழக்கறிஞரை பின் தொடந்து வந்த மது போதை ஆசாமியால் மீண்டும் கோவையில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.