விவசாயிகளுக்கான புதிய செயலி ‘பிக் ஹாட்’: கோவையில் இன்று அறிமுகம்..!!

Author: Rajesh
5 May 2022, 6:18 pm

கோவை : விவசாயம் தொடர்பான ஆலோசனைகளை வழங்கும் விதமாக விவசாயிகளுக்கான இலவச செயலி ‘பிக் ஹாட் ‘ கோவையில் இன்று அறிமுக செய்யப்பட்டது.

விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைபொருட்களின் விளைச்சலை அதிகரிக்கும் விதமாகவும், விளை பொருட்களை நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யும் விதமாகவும் பிக் ஹாட் என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த செயலியின் அறிமுக விழா கோவையில் இன்று நடைபெற்றது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் மரபுசாரா எரிசக்தித் துறை சிறப்பு நிலைப் பேராசிரியர் புகழேந்தி இந்த செயலியை அறிமுகப்படுத்தி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் கூறியதாவது :

இந்தியாவின் மிகப்பெரிய டிஜிட்டல் வேளாண் உட்பொருட்கள் செயல் தளமான பிக் ஹாட் என்ற செயலி தமிழில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளை பொருட்களின் விளைச்சலை அதிகப்படுத்தும் விதமாக இந்த செயலில் தொடர்ந்து ஆலோசனை வழங்கும்.

மேலும் அந்தந்த பகுதியின் மண் தன்மைக்கு ஏற்ற பயிர்கள் குறித்தும் விவசாயிகளுக்கு பரிந்துரை செய்யும்.

ஒரு பயிர் பாதிக்கப்பட்டால் அதை படம்பிடித்து செயலில் பதிவு செய்தால், தாவரவியலாளர்கள் செடியின் பாதிப்பு தன்மை குறித்து அதற்கு அளிக்கவேண்டிய ஊட்டச்சத்துக்கள் ஆலோசனை வழங்குவார்கள். மேலும் விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை கிசான் பஜார் என்ற இணைய பக்கத்தின் மூலம் விற்பனை செய்யும் முறையும் இதில் உள்ளது. இந்த செயலி விவசாயிகளுக்கு முற்றிலும் இலவசமாக அறிவியல் நுணுக்கங்களை கற்றுக் கொடுத்து விஞ்ஞான முறையில் விவசாயம் செய்ய உதவும்.

இவ்வாறு அவர் கூறினார்.

  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…
  • Close menu