கணவன் கண்முன்னே மனைவிக்கு சில்மிஷம் : தட்டிக்கேட்ட தம்பதியை தான் ஒரு காவல்துறை அதிகாரி என மிரட்டல்.. வெளியான உண்மை! (வீடியோ)

Author: Udayachandran RadhaKrishnan
2 October 2022, 6:05 pm

சென்னையில் ஓடும் பேருந்தில் பெண் பயணியிடம் சிலமிஷ்த்தில் ஈடுபட்டு, தான் ஒரு காவல் அதிகாரி என கூறிக்கொண்டு மிரட்டும் நபரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது

கோயம்பேடு நோக்கி சென்ற பேருந்தில் கணவன் – மனைவி பயணித்துள்ளனர். இவர்களது இருக்கைக்கு பின்னால் அமர்ந்து பயணித்த நபர் தூங்குவது போல், அப்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதைத் தட்டிக் கேட்ட பெண்ணையும், அவரது கணவரையும் ஆபாச வார்த்தைகளால் திட்டி அந்நபர் தாக்க முயற்சித்துள்ளார். தான் காவல்துறையில் பணியாற்றியதாகவும் கூறியுள்ளார்.

இந்த வீடியோ வைரலாகிய நிலையில், நெட்டிசன்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை ஆவடி காவல் ஆணையத்தை டேக் செய்து பதிவிட்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் இவர் காவல்துறையில் பணியாற்றவில்லை என்பது தெரியவந்துள்ளது.

  • sundar c openly talks about nayanthara in mookuthi amman sets நயன்தாரா இப்படிலாம் செய்வாங்கனு எதிர்பார்க்கல- உண்மையை போட்டுடைத்த சுந்தர் சி!