காவல் நிலையம் முன்பு ரீல்ஸ் செய்து பள்ளி மாணவர்கள் அட்டகாசம் : பரவிய வீடியோவால் போலீசார் வைத்த செக்!!

Author: Udayachandran RadhaKrishnan
22 November 2022, 4:56 pm

விழுப்புரம் டவுன் காவல் நிலைய வாயில் முன்பு அரசு பள்ளி மாணவர்கள் ரீல்ஸ் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைதளங்களில் ரீல்ஸ்செய்து வெளியிடுவது என்பது பொதுமக்கள் மத்தியில் பரவலாக இருந்து வருகிறது. ரீல்ஸ் செய்யும் போது பிறந்த நாள் கேக்குகளை பட்டா கத்தியால் வெட்டி சமூக வலைதளங்களில் பதிவிடக்கூடாது எனவும் அப்படி செய்தால் அவர்கள் மீது நடவடிக்கையும் தமிழக காவல் துறை சார்பில் எடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் விழுப்புரம் காமராஜர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் டவுன் காவல் நிலையம் முன்பு ரீல்ஸ் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர்.

இந்த வீடியோ பதிவானது விழுப்புரம் பகுதியில் வைரலானதை தொடர்ந்து டவுன் போலீசார் விசாரனை செய்ததில் விழுப்புரம் பெரிய காலனி பகுதியை சார்ந்த கோகுல் என்ற மாணவன் உணவு இடைவேளையின் போது பள்ளிக்கு அருகிலுள்ள காவல் நிலையத்தில் தண்ணீர் அருந்த வரும்போது தனது நண்பருடன் இணைந்து ரீல்ஸ் செய்து வெளியிட்டதது தெரியவந்தது.

இதனையடுத்து இரு மாணவர்களையும் அழைத்து போலீசார் இது காவல் நிலைய வாயில் முன்பு ரீல்ஸ் வீடியோ செய்ய கூடாது என எச்சரிக்கை செய்தும், அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்