அரை பவுன் நகைக்காக மூதாட்டி கொலை: காதுகளை அறுத்து கொன்ற கொடூரம்..மர்மநபர்களுக்கு வலைவீச்சு..!!
Author: Rajesh17 March 2022, 6:31 pm
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே முன்னூரான் காடுவெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மூதாட்டி காத்தாயி. இவருக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டுள்ளார்.
தினமும் காலை வயலுக்கு சென்று விட்டு மீண்டும் மாலை நேரத்தில் வீடு திரும்புவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் இன்று காலை வயலுக்கு சென்ற மூதாட்டி அந்தப் பகுதியில் உள்ள நீர் வரத்து உள்ள ஓடை பகுதியில் நீரில் மூழ்கிய நிலையில் கிடந்துள்ளார்.
இதுகுறித்து அப்பகுதியை வயலுக்கு சென்ற சில பார்த்துவிட்டு அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அங்கு வந்து பார்த்த உறவினர்கள் மூதாட்டி இறந்ததை உறுதி செய்தனர்.
இதனையடுத்து ஆண்டிமடம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மூதாட்டியின் உடலை கைப்பற்றி விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையில் இரு காதுகளையும் அறுத்து அரை பவுன் மதிப்புள்ள தோடுகளை திருடி அந்த இடத்திலேயே ஓடையில் மூதாட்டியை கொலை செய்துவிட்டு மர்ம நபர்கள் தப்பிச் சென்றது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து ஆண்டிமடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதேபோல் ஆண்டிமடம் அருகே உள்ள அகினேஸ்புரம் பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த நட்சத்திரமேரி பாட்டியின் ஒரு காது தோட்டை மர்ம நபர்கள் அறுத்து சென்றதாகவும் தோடு கவரிங் என்பதால் புகார் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.