ஹோட்டல் சாம்பாரில் கிடந்த பல்லி.. உள்ளே இருந்த புழு, பூச்சி -பார்த்ததுமே அதிர்ந்து போன அதிகாரிகள்..!

Author: Vignesh
28 August 2024, 12:48 pm

சாம்பாரில் பல்லி இருந்ததால் உணவகத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்து, ஐந்து நாட்கள் உணவகத்தை மூடி சமையல் அறையை சுத்தம் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

காரைக்குடி புதிய அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை முன்பு உள்ள மீனாட்சி உணவகத்தில், இன்று காலை நோயாளி ஒருவருக்கு அவரது உறவினர் வாங்கிச்சென்ற இட்லிக்கு கொடுத்த சாம்பாரில் பல்லி இருந்ததாக புகார் எழுந்தது.

அதனைத் தொடர்ந்து, சிவகங்கை உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் பிரபாவதி தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்து காலாவதியான உணவுப் பூரி, புரோட்டா, கோழிக்கறி சமையல் மசாலா பொருள்கள் அழுகிப்போன காய்கறிகள் பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்தனர்.

சுகாதாரமற்ற முறையில், இருந்த உணவகத்தின் சமையலறையை ஐந்து நாட்களில் சுத்தப்படுத்தி சரி செய்யவும் இதுவரை உணவகத்தை மூடவும் உத்தரவிட்ட அதிகாரிகள் உணவகத்திற்கு ஐந்தாயிரம் ரூபாய் அபதாரம் விதித்தனர்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 217

    0

    0