நீலகிரியில் மோடி ஜி – 2ஜிக்கும் தான் போட்டி… மத்திய இணையமைச்சர் எல்.முருகன் காரசார பேச்சு!

Author: Udayachandran RadhaKrishnan
24 March 2024, 3:53 pm

நீலகிரியில் மோடி ஜி – 2ஜிக்கும் தான் போட்டி… மத்திய இணையமைச்சர் எல்.முருகன் காரசார பேச்சு!

நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளராக மத்திய இணை அமைச்சர் எல் முருகன் அறிவிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அவிநாசியில் இன்று தனது பிரச்சாரத்தை தொடங்கிய எல் முருகன் முன்னதாக அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் தரிசனம் மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து அருகிலுள்ள ரோட்டரி மஹாலில் அவிநாசியை சேர்ந்த சமூக ஆர்வலர்களை சந்தித்து அவர்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் மத்திய அரசின் 10 ஆண்டுகால சாதனைகளையும் மாநில அரசின் மூன்று ஆண்டுகால ஊழல் அவலங்களையும் மக்களிடம் கொண்டு சென்று பிரசாரம் மேற்கொள்ள இருப்பதாகவும் , நீலகிரி தொகுதி மக்கள் திமுக வேட்பாளரை கண்டு வெட்கி தலை குனிகிறார்கள்.

2 ஜி வழக்கின் குற்றப் பின்னணி உடையவர் , சனாதனம் பட்டியலின மக்களின் ஒரு தரப்பினரையும் , பெண்கள் என பல தரப்பு மக்களையும் அவதூறாக பேசும் வேட்பாளரை பெற்றதால் அவர்கள் வெட்கி தலை குனிகிறார்கள்.

பாஜகவிற்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருவதை பிரதமரின் ரோடு சோ மற்றும் திருப்பூர் சேலம் நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற மாநாடுகள் மூலம் அனைவரும் அறிந்துள்ளார்கள். நீலகிரி தொகுதி திமுக வேட்பாளர் ஆ. ராசாவின் 2ஜி வழக்கை மீண்டும் சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி இருப்பது அவர்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது எனவும் பேட்டி அளித்தார். நீலகிரி தொகுதியை பொருத்தவரை மோடி ஜி ஆயா 2 ஜியா என்ற போட்டி தான் நிலவுவதாகவும் தெரிவித்தார்.

  • Viduthalai 2 box office collection தினம் தினமும் இனி வேட்டை தான் …விடுதலை 2 முதல் நாள் வசூலை பாருங்க..!
  • Views: - 697

    0

    0