அரசு மருத்துவமனையில் இருந்து உயிருக்கு பயந்து உள்நோயாளிகள் ஓட்டம்.. இளைஞர் செயலால் அதிர்ச்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
15 October 2023, 5:23 pm

அரசு மருத்துவமனையில் இருந்து உள்நோயாளிகள் உயிருக்கு பயந்து ஓட்டம்.. இளைஞர் செயலால் அதிர்ச்சி!!

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த ஆயிரமடி பகுதியை சேர்ந்தவர் 19வயதான முனுசாமி(19).இவர் அருகிலுள்ள பேனா கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் இவர் தனது அம்மாவுடன் வசித்து வரும் நிலையில் கடந்த மூன்று நாடகளாக உணவு உட்கொள்ளாமல் பணிக்கு செல்லாமல் மன அழுத்தத்துடன் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.

இதனால் அவரது தாயார் முனிசாமி பணிபுரியக்கூடிய தொழிற்சாலை நண்பர்கள் உதவியோடு வாலாஜாபாத் மருத்துவமனையிலேயே தனது மகனை அனுமதித்திருக்கிறார்.

இந்த நிலையில் அங்குள்ள ஆண்கள் பிரிவிலே உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு நேற்றிரவு அனுப்பி வைக்கப்பட்டு இங்கு சகிச்சை பெற்று வரக்கூடிய நிலையில் தீடிரென கத்தி சத்தம் போட்டு அங்கிருந்த பொருட்கள் சிலவற்றை தள்ளிவிட்டு உடைத்திருக்கிறார்.

இதனால் அச்சமடைந்த சக நோயாளிகள் அப்பிரிவிலிருந்து வெளியேறி பதட்டத்துடன் காணப்பட்டனர்.

இந்த நிலையில் மருத்துவமனை நிர்வாக தரப்பில் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு மருத்துவமனையின் பாதுகாவலர்கள் உதவியோடு இளைஞரை பிடித்து அவருக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் அவர் போதைக்கு அடிமையாகி உள்ளாரா அல்லது மனநலம் பாதிக்கப்பட்டு இருக்கிறாரா என்பதை குறித்து மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் கத்தி கூச்சலிட்டு மருத்துவமனையிலிருந்த பொருட்கள் தள்ளிவிட்டு உடைத்தால் மருத்துவமனையே சற்று பரபரப்புடன் காணப்பட்டது.

  • Ajith viral interview இனியாவுது திருந்துங்க…ரசிகர்களை பார்த்து அஜித் கேட்ட நச் கேள்வி…வைரலாகும் வீடியோ..!