சத்து நிறைந்த மீனை முதலில் சைவத்தில் சேருங்க… மீன்வளத்துறை அமைச்சர் முன் வலியுறுத்திய ஆளுநர் தமிழிசை!!

Author: Udayachandran RadhaKrishnan
8 October 2023, 10:22 am

சத்து நிறைந்த மீனை முதலில் சைவத்தில் சேருங்க… மீன்வளத்துறை அமைச்சர் முன் வலியுறுத்திய ஆளுநர் தமிழிசை!!

குஜராத்தில் தொடங்கங்கப்பட்ட சாகர் பரிக்ரமா திட்டத்தின் ஒன்பதாம் கட்ட நிகழ்ச்சி புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் நடைபெற்றது. காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மத்திய மீன்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, மீன்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன், புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், புதுச்சேரி மாநில அமைச்சர் நமச்சியாவயம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

மீனவர்களின் ஆலோசனை கூட்டத்தில் 50க்கும் மேற்பட்ட மீனவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பின்னர் நிகழ்ச்சியில் பேசிய புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், “உணவு வகைகளில் மீன் அதிக அளவு புரத சத்து நிறைந்த உணவாகும். மீன் சாப்பிட்டால் இதயத்திற்கு நல்லது. ஹார்ட் அட்டாக் வருவதை தவிர்க்க மீன் உணவு மிகவும் முக்கியமானது.

மீனில் ஒமேகா 3 இருக்கிறது. முட்டையை சைவத்தில் சேர்த்தது போல மீனையும் சைவத்தில் சேர்க்க வேண்டும். சத்து நிறைந்த மீன் உணவை அசைவத்தில் இருந்து சைவமாக மாற்றுவதன் மூலம் அனைவருக்கும் புரதச்சத்து மிகுந்த உணவு கிடைக்கும்” எனத் தெரிவித்தார்.

  • Varun Dhawan Keerthy Suresh viral video அட்லீ போனை பார்த்து கீர்த்தி சுரேஷ் அதிர்ச்சி…ஒரு டைரக்டர்-க்கு உண்டான மரியாதையே போச்சு…!
  • Views: - 1474

    0

    0