கோவையில் செந்தில் பாலாஜியின் நண்பர் வீடுகளில் வருமான வரித்துறை ரெய்டு.. சீலிட்ட அறைகளில் தீவிர சோதனை!!

Author: Udayachandran RadhaKrishnan
12 July 2023, 1:59 pm

கோவையில் கடந்த மே மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தியிருந்தனர்.

அப்போது கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர் அரவிந்த் என்பவரின் இல்லத்தில் ஒரு அறை சீல் வைக்கப்பட்டு இருந்தது.

இதே போல பீளமேடு ரங்கநாயகி நகரில் ஒரு வீடு சீல் வைக்கப்பட்டு இருந்தது. விசாரணை நிறைவடைந்த நிலையில் இந்த இரு இடங்களிலும் வைக்கப்பட்ட சீல் வருமானவரித்துறை அதிகாரிகளால் அகற்றப்பட்டது.

மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு படை போலீசாருடன் வந்த வருமானவரித்துறை அதிகாரிகள் சீலினை அகற்றினர்.

  • Rajinikanth and Jayalalithaa ரஜினி – ஜெயலலிதா நடிக்க இருந்த படம் இதுவா? நடிக்காததற்கு ஜெயலலிதாவே சொன்ன காரணம்!