கரூர் துணை மேயர் வீட்டில் நீடிக்கும் ஐடி ரெய்டு… திமுகவினர் முட்டுக்கட்டை போட்ட நிலையில் தொடரும் அதிரடி வேட்டை!!

Author: Udayachandran RadhaKrishnan
28 May 2023, 6:19 pm

கரூரில் மூன்றாவது நாளாக வருமான வரித்துறை சோதனை தொடங்கியது. ஏற்கனவே இரண்டு இடங்களில் நடைபெற்று வரும் நிலையில், தற்போது ராயனூர் பகுதியில் அமைந்துள்ள துணை மேயர் தாரணி சரவணன் வீட்டில் இரண்டு வாகனங்களில் வந்த எட்டுக்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை துவக்கி உள்ளனர்.

முதல் நாள் சோதனை மேற்கொள்ள வந்த போது திமுக தொண்டர்கள் வழிமறித்து சோதனை செய்யவிடாமல் தடுத்தும் மற்றும் இரவில் சீல் வைத்த போதும் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் இரண்டு நாட்கள் சோதனை நடைபெறாத நிலையில் இன்று சோதனையை துவங்கிள்ளனர்.

தாரணி சரவணன் நிதி நிறுவனம் மற்றும் இரு சக்கர வாகனம் விற்பனை உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Parthiban talks about MGR அடேங்கப்பா.! எம்ஜிஆர்-ன் கருப்பு கண்ணாடி ரகசியம்…போட்டுடைத்த பார்த்திபன்.!