முன்னாள் திமுக மாவட்ட செயலாளரின் சகோதரி வீட்டில் ரெய்டு… கரூரில் மட்டும் 4 இடங்களில் அதிகாரிகள் சோதனை..!!!

Author: Babu Lakshmanan
3 November 2023, 9:13 am

கரூரில் மறைந்த முன்னாள் திமுக மாவட்ட செயலாளர் வாசுகி முருகேசனின் சகோதரி வீடு உட்பட நான்கு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகர் பகுதியில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் கரூர் மாவட்ட திமுக செயலாளர் வாசுகி முருகேசனின், சகோதரி பத்மா என்பவரது வீட்டில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதேபோல், காந்திபுரம் பகுதியில் அமைந்துள்ள அனெக்ஸ் சுரேஷ் என்பவருக்கு சொந்தமான நிதி நிறுவன அலுவலகம் மற்றும் வையாபுரி நகர் பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

மேலும், தோட்டக்குறிச்சி பகுதியில் உள்ள திமுக முன்னாள் சேர்மன் இல்லமான சக்திவேல் இல்லத்திலும் தற்போது சோதனை நடைபெற்று வருகிறது. மூன்று வாகனங்களில் வந்த சுமார் 10 அதிகாரிகள் நான்கு குழுக்களாக பிரிந்து துணை ராணுவப் படை வீரர்கள் பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

  • vaadivaasal movie shooting starts on august ஒரு வழியாக தொடங்கப்போகுது வாடிவாசல்? ஒரு படத்துக்கு இவ்வளவு இழுபறியா?