நாங்க வேண்டாம்னு சொல்றோம்.. நீங்க உயர்த்திட்டே இருக்கீங்க.. செப்.1 முதல் சுங்கக் கட்டணம் உயர்வு..!

Author: Vignesh
26 August 2024, 11:11 am

தமிழ்நாட்டில் 25 சுங்க சாவடிகளில் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் சுங்கு கட்டணம் உயர்வதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, தேசிய நெடுஞ்சாலை ஆணைய கட்டுப்பாட்டில் உள்ள சுங்கசாவடிகளில் ஏப்ரல் செப்டம்பரில் சுங்க கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது.

நாள் முழுவதும் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுங்க சாவடிகளில் ஆண்டுக்கு இரண்டு முறை கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது. நடைபாண்டில் ஏப்ரல் மாதம் மாற்றி அமைக்கப்பட வேண்டிய சுங்க கட்டணம் நாடாளுமன்ற தேர்தலால் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. இதனால், தேர்தல் முடிந்த நிலை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கடந்த ஜூன் மாதம் சங்கு கட்டணத்தை உயர்த்தியது.

கடந்த ஜூலை தமிழ்நாட்டில் 36 சுங்கச்சாவடிகளில் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டு ஐந்து சதவீதம் வரை கட்டண உயர்வு அமல்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் 25 சுங்க சாவடிகளில் ஐந்து முதல் ஏழு சதவீதம் வரை சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக, விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை, சமயபுரம், மதுரை எலியார்பத்தி, ஓமலூர் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது. ஸ்ரீபெரும்புதூர் வாலாஜா உள்ளிட்ட 25 சுங்க சாவடிகள் கட்டணம் உயர்கிறது. இந்த கட்டண உயர்வால் வாகன ஓட்டிகள் ஐந்து முதல் 150 வரை கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Rashmika Mandanna injury update வீல் சேரில் பரிதாபமாக வந்த நடிகை ராஷ்மிகா…பீலிங்ஸ் ஆன ரசிகர்கள்…!