கையெழுத்து போடுங்க, இல்லனா TC வாங்குங்க.. பள்ளி வளாகத்தில் பிரச்சனை ஏற்பட்டால் நிர்வாகம் பொறுப்பல்ல : சிபிஎஸ்இ பள்ளி கட்டாயத்தால் சர்ச்சை!!

Author: Udayachandran RadhaKrishnan
25 July 2022, 4:54 pm
Parents Complain on GRD School - Updatenews360
Quick Share

கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் சி.பி.எஸ்.சி பள்ளியில் பெற்றோரிடம் கட்டாயப்படுத்தி “indemnity” (பள்ளிக்குழந்தைகளுக்கு வளாகத்தில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் நிர்வாகம் பொருப்பல்ல) என்ற படிவத்தில் கையெழுத்து வாங்குவதாக சர்ச்சை எழுந்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை விவகாரத்தை தொடர்ந்து, தனியார் பள்ளிகள் சில கட்டுப்பாடுகளை போட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதில் கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் சி.பி.எஸ்.சி பள்ளியில் “indemnity” (பள்ளிக்குழந்தைகளுக்கு வளாகத்தில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் நிர்வாகம் பொருப்பல்ல) என்ற படிவத்தை பெற்றோர்கள் கையெழுத்திட கட்டாயபடுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும் கையெழுத்திடவில்லை என்றால் “TC” மாற்றுச்சான்றிதழ் பெற்றுச் செல்லுமாறு வற்புறுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து பள்ளி நிர்வாகத்தினர் கூறும் போது, பள்ளியில் “indemnity” (பள்ளிக்குழந்தைகளுக்கு வளாகத்தில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் நிர்வாகம் பொருப்பல்ல) என்ற படிவம் வாங்குவது உண்மை தான் ஆனால் கட்டாயப்படுத்துவது இல்லை என தெரிவிக்கின்றனர்.

  • Vijay கமலுக்கு No.. சீமானுக்கு Yes.. விட்டுக் கொடுக்காத விஜய்
  • Views: - 738

    0

    0