மீடியா டவரில் மிளிர்ந்த தேசியக்கொடி… சுதந்திர தின ஸ்பெஷல் ; கோவை மக்களின் கண்களை கவர்ந்த நிகழ்வு…!!
Author: Babu Lakshmanan15 August 2023, 9:43 pm
கோவையில் சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பந்தய சாலை மீடியா டவர் போன்றவை வண்ண விளக்குகளால் மிளிர விடப்பட்டுள்ளன.
நாட்டின் 77 வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஓரு பகுதியாக கோவையில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. மாநகர 700 போலீசாரும் புறநகரில் ஆயிரம் போலீசாரும் என 1700க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இது தவிர பேருந்து நிலையம், விமான நிலையம், ரயில் நிலையம் உட்பட மக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.
இதனிடையே, சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக கோவை மாநகராட்சி பிரதான கட்டிடமான விக்டோரியா ஹால் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மீடியா டவரில் வழக்கமான வண்ண விளக்குகளுக்கு பதிலாக தேசியக்கொடி வடிவிலான விளக்குகள் மிளர விடப்பட்டுள்ளது.
இரவு நேரத்தில் அப்பகுதியில் செல்பவர்கள் உற்சாகத்துடன் இந்த வண்ண விளக்குகளை பார்த்து செல்கின்றனர். மேலும் பொதுமக்கள் மீடியா டவரின் முன்பாக நின்று புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.