சுதந்திர தினத்திற்கும் NO LEAVE…. கள்ளச்சந்தையில் மதுவிற்பனை படுஜோர் ; கண்டுகொள்ளுமா மாவட்ட நிர்வாகம்..?
Author: Babu Lakshmanan15 August 2023, 9:23 pm
திண்டுக்கல் ; நத்தம் அருகே சுதந்திர தினத்தன்று CCTV பாதுகாப்புடன் கள்ளச் சந்தையில் மது விற்பனை படுஜோராக நடைபெற்றது சமூகஆர்வலர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக முழுவதும் சுதந்திர தினத்தன்று மதுபான கடைகளுக்கு விடுமுறை அறிவித்துள்ள நிலையில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கோபால்பட்டி அடுத்துள்ள ஒத்தக்கடையில் (திண்டுக்கல்-நத்தம் மெயின் சாலையில்) சிசிடிவி பாதுகாப்புடன் கள்ளச் சந்தையில் பெட்டி பெட்டியாக வைத்து மதுபானங்கள் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது.
இதனால் முன்பகுதியில் உள்ள மெயின் சாலையில் இருபுறமும் கூட்டம் அலைமோதுகிறது. மேலும், காவல்துறை மற்றும் அதிகாரி மீது எந்த ஒரு அச்சமும் இல்லாமல், சர்வ சாதாரணமாக விற்பனையை ஈடுபட்டு வருகின்றனர்.
அரசு அறிவித்துள்ள கட்டுப்பாட்டை மீறி மது விற்பனையில் ஈடுபடுவர் மீது நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்? என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.