தாமரையை தின்னாச்சு… இரட்டை இலையை மென்னாச்சு ; TVS XL-லில் சென்று மன்சூர் அலிகான் அட்ராசிட்டி பிரச்சாரம்…!!!

Author: Babu Lakshmanan
6 April 2024, 12:01 pm

அருணாச்சல பிரதேசத்தை சீனா பாதி ஆக்கிரமித்து உள்ளதாகவும், இதை கோழை பிரதமர் கேட்க முன்வரவில்லை என்று வேலூர் தொகுதி நாடாளுமன்ற சுயேட்சை மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் சார்பில் சுயேட்சையாக போட்டியிடும் மன்சூர் அலிகான், வேலூர் மண்டி தெரு பகுதியில் உள்ள பூ மார்க்கெட்டில் தனது பிரச்சாரத்தை துவக்கினார். அப்போது, அந்த பகுதியில் இருந்த அனைத்து கடைகளுக்கும் சென்று வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்தார்.

மேலும் படிக்க: காதலர்களை கட்டிப்போட்டு கத்திமுனையில் 2 சகோதரிகள் பலாத்காரம்… விடியவிடிய சீரழித்த கும்பல் ; திண்டுக்கல்லில் அதிர்ச்சி..!!

அங்கு அவருக்கு பூக்கடை வியாபாரிகள் மாலை அணிவித்து பொன்னாடை போற்றி மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்பு அளித்தனர். மேலும், இருசக்கர வாகனத்தை இயக்கியவாறு அனைத்து பகுதிகளுக்கும் சென்று வெற்றி சின்னமான பலாப்பழ சின்னத்திற்கு வாக்களிக்குமாறு பிரச்சாரம் மேற்கொண்டார்.

மேலும், பூக்கடையில் இருந்த தாமரை பூவையும் துளசி இலையையும் வாங்கி வாயில் போட்டுக்கொண்டு தாமரையை தின்னாச்சி, இரட்டை இலையை மென்னாச்சு பலாப்பழம் ஜெயிச்சாச்சு என்று கூறினார்.

மேலும் படிக்க: அமைச்சர் நேருவுக்கு நெருக்கமான இடங்களில் 2வது நாளாக வருமான வரித்துறை சோதனை… கோவையில் விடிய விடிய ரெய்டு..!!

பின்னர் செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :- வேலூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக நான் தனியாகத்தான் வேட்பு மனுவை தாக்கல் செய்தேன். பின்பு தன்னிடம் சில பேர் ஆதரவு கொடுப்பதாக தன்னிடம் கூறினார்கள். பின்பு அனைத்து இடங்களிலும் திமுக குறித்து அவதூறாக பேசி வந்தனர். ஆனால் அதிமுக பற்றி அவர்கள் எதுவும் பேசவில்லை.

பின்பு இது குறித்து விசாரித்த போது தான் தெரிகிறது. அதிமுக இவர்களை விலக்கி வாங்கிக்கொண்டு தன்னிடம் அனுப்பி வைத்திருப்பது தெரிய வந்தது. இது போன்ற துரோகம் நடந்ததால் எனக்கு யாரும் வேண்டாம். நான் மக்களுடன் கூட்டணி. எனக்கு மக்கள் இருக்கிறார்கள். நான் மக்களுடன் இணைந்து வேலூர் பகுதியில் போட்டியிடுகிறேன். என்னை மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆக்குவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. என்னுடன் இருந்தவர்களை விலைக்கு வாங்கி விட்டனர்.

அதிமுகவினர் அணைக்கட்டு தொகுதி வேப்பங்குப்பம் பகுதியில் நேற்று நான் பிரச்சாரம் மேற்கொள்ளும் போது, நான் இல்லாத நேரத்தில் அதிமுக காரர்கள் அவதூறாக பேசி உள்ளனர். அவர்கள் மீது வழக்கு தொடர உள்ளேன். மேலும், காங்கிரஸ் அளித்துள்ள வாக்குறுதிகளை நான் வரவேற்கிறேன். அருணாச்சல பிரதேசத்தை சீனா பாதி ஆக்கிரமித்து விட்டார்கள். கோழை பிரதமர் வாயை திறக்க முன்வரவில்லை, எனக் கூறினார்.

தமிழகத்திற்கு மோடி வருவது குறித்த கேள்விக்கு, மன்சூர் அலிகான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதால் பிரதமர் மோடி வருகிறார். பிரதமர் மோடி மணிப்பூர் மற்றும் அருணாச்சலப் பிரதேசங்களில் சென்று மாநாடு நடத்த வேண்டும். ஆனால், அங்கெல்லாம் செல்லாமல் இங்கு நான் தேர்தலில் நிற்பதால் பிரதமர் மோடி வருகிறார், என்று தெரிவித்தார்.

  • Telangana bans special shows சிறப்பு காட்சிக்கு END CARD…அல்லு அர்ஜுன் ஷாக்…பேரதிர்ச்சியில் சினிமா ரசிகர்கள்…!
  • Views: - 455

    0

    0