‘எல்லோருமே திருடங்க தான்’… பாடலை ஒலிக்கச் செய்தபடி நடனமாடிக் கொண்டே வந்து வேட்பு மனு தாக்கல் செய்த சுயேட்சை!!!

Author: Babu Lakshmanan
27 March 2024, 8:09 pm

திண்டுக்கல்லில் எல்லோருமே திருடங்க தான் என்ற பாடலை ஒலிக்கச் செய்தபடி நடனம் ஆடிக்கொண்டு வந்த சுயேட்சை வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்த சம்பவம் அங்கிருந்தவர்களை ஆச்சயர்படச் செய்தது.

மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்காக பல்வேறு கட்சியின் வேட்பாளர்கள் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் மனுவை வழங்கி வேட்பு மனு தாக்கல் செய்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், திண்டுக்கல் கிழக்கு ஆரோக்கிய மாதா தெருவை சேர்ந்த அன்பு ரோஸ் என்ற சுயேச்சை வேட்பாளர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு, எல்லோருமே திருடங்கதான் என்ற சினிமா பாடலை ஒலிக்கச் செய்தபடி, நடனமாடிக் கொண்டே வந்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

மேலும், வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று சினிமா பாடலை ஒலிக்கச் செய்தபடி, நடனமாடிக் கொண்டே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் வந்த சுயேச்சை வேட்பாளர் அன்பு ரோஸ் என்பவரது நடனம், அங்கிருந்த அனைவருக்கும் சிறிது நேரம் வேடிக்கையாக இருந்தது.

இதேபோல, கடந்த சட்டமன்றம் மற்றும் மக்களவைத் தேர்தலின் போதும் நடனமாடிக்கொண்டே வேட்பு மனு தாக்கல் செய்ய வந்ததும், அதேபோல பிரச்சாரத்தின் போதும் நடனமாடிக் கொண்டே வாக்கு சேகரித்ததும் குறிப்பிடத்தக்கது.

மேலும், வேட்பு மனுவில் வேட்பாளருக்குரிய 1 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க ஆபரணங்கள், நான்கு சக்கர வாகனம், இரு சக்கரம் வாகனம் என அசையும் சொத்தும், 7 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்தும், வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் வீட்டுக் கடன், வியாபார கடன், தனிநபர் கடன் என 3 கோடி ரூபாய் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

  • Lokesh Kanagaraj Kaithi 2 Updates சொர்க்கவாசல் படத்தால் கைதி 2 – க்கு சிக்கல்..குழப்பத்தில் லோகேஷ் ..!
  • Views: - 215

    0

    0