சுயேச்சை பெண் வேட்பாளரின் இரு சக்கர வாகனத்துக்குத் தீ வைப்பு…! போலீசார் விசாரணை
Author: kavin kumar16 February 2022, 4:38 pm
விருதுநகர் : ஸ்ரீவில்லிபுத்தூரில் போட்டியிடும் சுயேட்சை பெண் வேட்பாளரின் இரு சக்கர வாகனத்திற்கு தீ வைத்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளது. இதில் 142 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் 3 -வது வார்டில் திமுக, அதிமுக, தேமுதிக, மற்றும் சுயட்சை கட்சியை சேர்ந்த 4 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் சுயேச்சையாக குலையுடன் கூடிய தென்னை மரம் சின்னத்தில் போட்டியிடும் குலாலர் தெருவை சேர்ந்த வேட்பாளர் சுப்புலட்சுமி என்பரவது கணவரின் இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் நள்ளிரவில் தீ வைத்துள்ளனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.மேலும் தேர்தல் போட்டியின் காரணமாக தீ வைக்கப்பட்டதா? இல்லை வேறு ஏதும் காரணமா என்ற கோணத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டும் இருசக்கர வாகனத்திற்க்கு தீ வைத்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.