மீண்டும் மீண்டுமா…கோட்டை விட்ட கோலி…தடுமாற்றத்தில் இந்திய அணி..!
Author: Selvan3 January 2025, 12:54 pm
தனி ஒருவனாக போராடும் பும்ரா
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே 5-வது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது.அந்த வகையில் முதலில் டாஸ் வின் பண்ணி பேட்டிங்கை தேர்வு செய்தார் இந்திய கேப்டன் பும்ரா.
கடந்த பல போட்டிகளில் தொடர்ந்து மோசமான பேட்டிங்கை ஆடி வரும் ரோஹித் சர்மா,இந்த கடைசி போட்டியில் இருந்து விலகினார்.இதனால் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் கே எல் ராகுல் களமிறங்கினார்கள்.
ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே ஆஸ்திரேலியா அணியின் பவுலர்களை தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்தனர்.விராட் கோலி வழக்கம் போல ஆப் சைடு சென்ற பந்தை அடிக்க முயற்சி செய்து,தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
இதனால் இந்திய அணியின் மோசமான பேட்டிங் தொடர்ந்து கொண்டே இருக்கிறது, ஓரளவு தாக்கு பிடித்த ரிஷப் பந்த் மட்டும் அதிகபட்சமாக 40 ரன்கள் எடுத்தார்.இதன் மூலம் இந்திய அணி 185 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
இதையும் படியுங்க: மீண்டும் பும்ரா கேப்டன்…அப்போ ரோஹித்…இந்திய அணியில் தொடரும் குழப்பம்..!
அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி முதல் நாள் முடிவில் ஒரு விக்கெட் இழந்து 9 ரன்கள் எடுத்துள்ளது.இந்திய அணி இந்த போட்டியை கட்டாய வெற்றி பெற வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளதால்,ஆட்டத்தின் விறுவிறுப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை என கூறப்படுகிறது.