AUS VS IND:இளம் வீரரை சீண்டிய கோலி…மைதானத்தில் ஏற்பட்ட பரபரப்பு..வைரலாகும் வீடியோ.!

Author: Selvan
26 December 2024, 2:08 pm

சாம் கான்ஸ்டாஸ்: இளம் வீரர் மீது கோலியின் கோபம்

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கிடையே 4 வதுடெஸ்ட் போட்டி இன்று மெல்போர்னில் நடைபெற்று கொண்டிருக்கிறது .முதலில் டாஸ் வின் பண்ணி பேட்டிங்கை தேர்வு செய்தார் பேட் கம்மின்ஸ்.

Virat Kohli 4th Test confrontation

அந்த வகையில் ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்களாக சாம் கான்ஸ்டாஸ் மற்றும் கவாஜா இறங்கினார்கள்.சாம் கான்ஸடாசுக்கு இப்போட்டி முதல் சர்வேதேச போட்டி,அவர் மேட்ச் ஆரம்பித்த முதலில் இருந்தே தன்னுடைய அதிரடி பேட்டிங்கால் இந்திய பந்து வீச்சாளர்களை திணறிடித்தார்.

அதிலும் குறிப்பாக இந்திய அணியின் தலைசிறந்த பவுலரான பும்ரா வீசிய ஓவரில் அபாரமாக சிக்ஸர் அடித்து ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தினார்.

இதனால் மைதானத்தில் கோவமாக இருந்த விராட்கோலி,10 வது ஓவர் முடிந்த போது கான்ஸ்டாஸ் எதிர் முனைக்கு நடந்து கொண்டிருந்தார்.அப்போது பந்தை எடுத்துக்கொண்டு விராட்கோலி எதிர் திசையில் வந்தார்.அப்போது தோள்பட்டையை வைத்து இளம் வீரர் கான்ஸ்டாஸை இடித்து சில வார்த்தைகளை விட்டார்.பதிலுக்கு அவரும் வார்த்தையை விட மைதானத்தில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக உஷ்மான் கவாஜா மற்றும் நடுவர்கள் வந்து இருவரையும் சமாதானப்படுத்தி விலக்கி விட்டனர்.இந்த வீடியோ வைரல் ஆனதையடுத்து பல முன்னாள் ஆஸ்திரேலியா வீரர்கள் கோலி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,அவர் ஒரு சீனியர் பிளேயர் அவர் இப்படி நடந்து கொள்ளலாமா என தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இளம் வீரர் சாம் கான்ஸ்டாஸ் மீது எந்த தவறும் இல்லை,கோலி மீது தான் முழு தவறும் உள்ளது என குற்றம் சாடி வருகின்றனர்.

  • Khalid Rahman, filmmaker Ashraf Hamsa arrested for cannabis possession in Kochi கஞ்சா வைத்திருந்த பிரபல சினிமா இயக்குநர்கள்..வளைத்து வைளத்து கைது செய்யும் போலீசார்!