ரோஹித் தலைமையில் சாம்பியன்ஸ் ட்ராபி-க்கு ரெடியான இந்திய அணி…மீண்டும் அணிக்கு திரும்பிய முக்கிய வீரர்..!

Author: Selvan
18 January 2025, 4:59 pm

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்த சாம்பியன்ஸ் ட்ராபி தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ தற்போது வெளியிட்டுள்ளது.

இந்த தொடரில் ரோஹித் சர்மா கேப்டனாகவும்,கில் துணை கேப்டனாகவும் செயல்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்திய அணியில் விராட்கோலி,ஜெய்ஸ்வால்,கே எல் ராகுல்,ஜடேஜா,அக்சர் பட்டேல்,வாஷிங்க்டன் சுந்தர்,ரிஷப் பந்த்,ஹர்திக் பாண்டியா,குல்தீப்,ஷமி,அர்ஷிதீப் சிங்,ஷ்ரேயஸ் ஐயர்,பும்ரா உள்ளிட்ட 15 வீரர்களை இந்திய அணி அறிவித்துள்ளது.

India vs England ODI series 2025

இந்த தொடரில் இந்திய அணியின் நட்சத்திர பவுலர் பும்ரா காயம் காரணமாக இடம்பெறுவாரா மாட்டாரா என்ற கேள்வி எழுந்த நிலையில்,தற்போது பும்ராவின் மருத்துவ அறிக்கைக்காக இந்திய அணி காத்திருப்பதாகவும் கூறியுள்ளனர்.

இதையும் படியுங்க: ரிங்கு சிங்குடன் என் மகளுக்கு நிச்சயதார்த்தமா…யாரு சொன்னா…பெண் எம்.பி-யின் தந்தை ஆவேசம்.!

மேலும் கடந்த ஒரு வருடமாக காயம் காரணமாக இந்திய அணியில் விளையாடாமல் இருந்த வேகப்பந்து வீச்சாளர் ஷமி இந்த தொடரின் மூலம் அணிக்கு திரும்பியுள்ளது ரசிகர்களை சந்தோஷப்படுத்தியுள்ளது.இந்த தொடரை பாகிஸ்தான் நிர்வாகம் நடத்தினாலும்,இந்திய அணி விளையாடும் ஆட்டங்கள் மட்டும் துபாய் மைதானங்களில் நடைபெற உள்ளது.

மேலும் இந்திய-இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் ஒரு நாள் தொடரில் ஒரே ஒரு மாற்றத்துடன்,பும்ராவுக்கு பதிலாக ஹர்ஷித் ராணா விளையாட உள்ளார்.மற்றபடி இதே அணியுடன் தான் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரிலும் இந்திய அணி விளையாட உள்ளது.இந்த தொடர் வருகின்ற 22 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது.சாம்பியன்ஸ் ட்ராபிக்கு முன் இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி விளையாடும் போட்டிகள் வீரர்களுக்கு ஒரு முக்கிய சவாலான போட்டியாக இருக்கும் என கருதப்படுகிறது.

  • Pathikichu Song Release விடாமுயற்சி பொங்கல் கொண்டாட்டத்திற்கு எண்டே கிடையாது…படத்தின் அடுத்த பாடல் ரெடி ஆட ரெடியா…!
  • Leave a Reply