தொடர் தோல்வியால் கடுப்பான கம்பீர்…ட்ரெஸ்ஸிங் ரூமில் எடுத்த அதிரடி முடிவு..!

Author: Selvan
1 January 2025, 9:04 pm

வீரர்களிடம் கடுமையாக பேசிய காம்பீர்

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி மோசமாக விளையாடி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது.அதிலும் குறிப்பாக இந்தியா அணியின் நட்சத்திர வீரர்களான ரோஹித் மற்றும் கோலி தங்களுடைய மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்திவருகின்றனர்.

India coach gambhir criticizes players

இதனால் இவர்கள் இருவரும் ஓய்வு பெற வேண்டும் என ரசிகர்கள் மட்டுமின்றி பல முன்னாள் வீரர்களும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.மெல்போர்னில் நடந்த 4-வது டெஸ்ட் போட்டியில் எந்த சிரமம் இல்லாமல் ஆட்டத்தை சமன் செய்யும் வாய்ப்பு பிரகாசமாக இருந்த போது,அதை இந்திய அணி கோட்டையை விட்டது.

இதனால் அன்றைய நாள் கோபத்துடன் இந்திய அணியின் பயிற்சியாளர் வீரர்களிடம் சென்று,போதும் இதுவரை நீங்கள் ஆடின ஆட்டம் எல்லாம் போதும்..இவ்ளோ நாள் உங்கள் இஷ்டத்திற்கு உங்கள் ஆட்டத்தை நீங்கள் வெளிப்படுத்தினீர்கள்,இனி நீங்கள் எப்படி ஆட வேண்டும் என்பதை நான் தான் முடிவு பண்ணுவேன்,இதை மீறுபவர்களுக்கு அணியில் இடமில்லை என்று காட்டமாக பேசியுள்ளார்.

இதையும் படியுங்க: https://www.updatenews360.com/tamilnadu/ms-dhoni-about-pr-agencies-in-cricket-010125/

இந்திய அணியின் படு தோல்வியால் உலகக்கோப்பை டெஸ்ட் இறுதி போட்டி கேள்விக்குறியில் உள்ளது.இதனால் ஜனவரி 3-ல் சிட்னியில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்து,ஒரு மானத்தோடு திரும்ப வேண்டும் என கம்பீர் முடிவில் உள்ளார்.

இதனால் அணியின் தேர்வுக்குழுவிடம் அனுபவ வீரர் புஜாராவை கொண்டு வர கம்பீர் திட்டமிட்டதாகவும் அதற்கு தேர்வுக்குழு மறுத்ததாக தகவல் வந்துள்ளது.மேலும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தால்,இந்திய அணி கேப்டன் ரோஹித் டெஸ்ட் போட்டியில் இருந்து தன்னுடைய ஓய்வை அறிவிக்கலாம் என்ற தகவலும் வந்துள்ளது.இதனால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் சிட்னியில் நடைபெறும் போட்டியை காண ஆர்வமுடன் இருக்கின்றனர்.

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!