இந்திய அணி செஞ்சது சரியா…ICC ரூல் என்ன சொல்லுது…ஆதங்கத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து கேப்டன்..!
Author: Selvan1 February 2025, 2:19 pm
12 வீரர்களை ஆட வைத்த இந்திய அணி
இந்திய-இங்கிலாந்து அணிகளுக்கிடையே 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடர் நடைபெற்று வருகிறது.இந்த தொடரில் இந்திய அணி 3-1என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்த நிலையில் நேற்று புனேவில் நடந்த 4 வது டி-20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றால் மட்டுமே தொடரை வெற்றி பெற வாய்ப்பு இருந்த நிலையில்,நேற்று நடந்த பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.

முன்னதாக இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடி 181 ரன்களை குவித்தது.சிவம் துபே மற்றும் பாண்டியா அதிரடியாக ஆடி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டனர்.ஆட்டத்தின் கடைசி ஓவரின் போது சிவம் துபேவின் தலைக்கவசத்தில் பந்து பலமாக பட்டது.இதனால் அவருக்கு தலையில் லேசான வலி ஏற்பட்ட காரணத்தினால் அவருக்கு பதிலாக மாற்று வீரராக ஹர்ஷித் ராணா ஆட்டத்தில் இறங்கினார்.
இதையும் படியுங்க: என் கூட உல்லாசமா இருக்கணும்.. இல்லைனா கொன்னுடுவேன் : பணிப்பெண்ணை மிரட்டிய திமுக பிரமுகர்!
ஹர்ஷித் ராணா அற்புதமாக பவுலிங் செய்து இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.இதனால் கடும் கோவத்தில் இங்கிலாந்து அணி மற்றும் ரசிகர்கள் இருந்தனர்.சிவம் துபே ஒரு பேட்டிங் ஆல்ரவுண்டர் என்பதால் அவருக்கு பதிலாக வேறொரு ஆள் ரௌண்டரை ஆட வைக்க வேண்டும்,அணியில் ரமந்தீப் ஆல்ரவுண்டர் இருக்கும் போது எப்படி ஹர்ஷித் ராணாவை அனுமதிக்கலாம்,அவர் ஒரு வேகப்பந்து வீச்சாளர்,விதிப்படி ஒரு வீரருக்கு காயம் ஏற்பட்டால் அவர் பேட்டர் என்றால் பேட்டிங் ஆடும் ஒரு வீரரும்,பந்துவீச்சாளர் என்றால் பந்துவீச்சாளரை அனுமதிக்க வேண்டும் இதுதான் விதி,இதனால் கடும் அதிருப்தி ஆன இங்கிலாந்து அணி கேப்டன் பட்லர் போட்டி முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியது,இணையான மாற்று வீரரை இந்திய அணி தேர்வு செய்யவில்லை,ஒன்று சிவம் துபே 25 மைல் வேகத்தில் போடும் பந்துவீச்சாளராக இருக்க வேண்டும் அல்லது ராணா ஒரு சிறப்பான பேட்டராக இருக்க வேண்டும் அப்போது தான் இந்திய அணி எடுத்த முடிவு சரியான முடிவாக கருதப்படும்,மேலும் இந்த முடிவு குறித்து என்னிடம் எந்த ஒரு ஆலோசனையும் செய்யப்படவில்லை.பின்பு நான் நடுவரிடம் இதைப்பற்றி ஆட்டத்தின் போது கேட்ட போது,அவர் போட்டி நடுவர் இதற்கு சம்மதம் தெரிவித்ததாக கூறினார்.மேலும் இந்திய அணி 12 வீரர்களை ஆட வைத்து வெற்றி பெற்றதாக தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
53 runs and 3 crucial wickets between Shivam Dube and Harshit Rana in Pune today 💭#INDvENG pic.twitter.com/i82hZrlpuj
— ESPNcricinfo (@ESPNcricinfo) January 31, 2025
மேலும் பல முன்னாள் இங்கிலாந்து வீரர்கள் இந்திய அணியின் இந்த செயலை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்,இந்திய ரசிகர்கள் பலரும் இந்திய அணி இவ்வாறு செய்தது தவறு என தங்களுடைய கமெண்ட்களை தெரிவித்து வருகின்றனர்.