இந்தியா ஒப்பந்த அடிப்படையிலான ஒன்றியம் அல்ல, இயற்கையான ஒன்றியம் : பாரதியார் பல்கலை., மாநாட்டில் தமிழக ஆளுநர் பேச்சு!!

Author: Udayachandran RadhaKrishnan
11 March 2022, 4:10 pm

கோவை : நம் நாட்டை சுமார் 65 ஆண்டுகளாக தான் இந்தியா என அழைக்கிறோம் என்று பாரதியார் பல்கலை., மாநாட்டில் தமிழக ஆளுநர் ஆர்என் ரவி பேசினார்.

பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுவரும் தென் மாநில துணை வேந்தர்கள் மாநாட்டை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது: இங்கே வந்துள்ள துணை வேந்தர்கள் கல்வியில் தேர்ந்தவர்கள்.

கல்வி தனித்து இருக்க வேண்டியது இல்லை. அதே வேளையில் அது தேசிய அளவில் நன்மை கொடுப்பதாக இருக்க வேண்டும். அதனால் நாம் அனைவரும் உயர்கல்வியை மாற்றி அமைக்க பாடுபட வேண்டும்.

இந்திய நாட்டிற்கு நமது பார்வை என்ன என்பதை பார்க்க வேண்டும் இளைஞர்கள் தான் நமது எதிர்காலம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். சுமார் 65 ஆண்டுகளாக தான் இந்தியா என அழைக்கிறோம். இந்தியாவை ஆள வந்த ஆங்கிலேயர்களுக்கு நாம் வெறும் நிலமாக இருந்தோம் அரசுகள் 5 ஆண்டுகள் தான் இருக்கும், ஆட்சிக்கு வந்தவுடன் அவர்கள் நிதி ஒதுக்குகிறார்கள் அது அடுத்த 3 ஆண்டுகளுக்கு தொடருகிறதுஅதன் பின்னர் இலவசங்களை நோக்கி அரசுகள் நகர்ந்து விடுகிறது .

அரசுகள் மாறினாலும் மக்களின் பிரச்சினைகள் ,சமூக பிரச்சினைகள் இருக்கவே செய்கின்றன
5 ஆண்டுகளுக்கு ஒருமுறை கல்வி கொள்கைகள் மாற்றி அமைக்கப்படுவதால் முழு பலனும் கிடைப்பதில்லை. இதனால் மாநிலங்களுக்கு இடையே சமநிலை இருப்பதில்லை.

2014ல் பிரதமர் மோடி ஆட்சி அமைந்த பின் புதிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. பார்வை மாறியிருக்கின்றது. சங்ககால படைப்புகளிலேயே பாரதம் என்ற வார்த்தை இருந்துள்ளது . செப்புமொழி 18 உடையாள் சிந்தனை ஒன்றுடையாள் என்ற பாரதியின் வரிகளுக்கு ஏற்ப இருக்க வேண்டும்.

இந்தியா ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையிலான ஒன்றியம் அல்ல. இந்தியா என்பது இயற்கையான ஒன்றியம் என்பதை கூட்டாட்சி குறித்து பேசுபவர்கள் உணர வேண்டும்.

2014ல் 400 புதிய நிறுவனங்கள் மட்டுமே இருந்தது, ஆனால் 2022ல் 10 ஆயிரம் ஸ்டார்ட் அப் நிறுவனங்களாக உயர்ந்துள்ளது. தற்போது 2047ம் ஆண்டு எப்படி இருக்க வேண்டும் என்பதை நாம் முடிவு செய்ய வேண்டும்.

2047ல் நம் இலக்கு உலகை வழிநடத்தும் இடத்தில் இந்தியா இருக்க வேண்டும் இதை வைத்து துணைவேந்தர்கள் யோசித்து, வேலைக்காக மட்டும் இல்லாமல், அனைவருக்கும் பயன்படும் வகையில் திட்டமிடல் செய்ய வேண்டும் .

கடந்த 20 ஆண்டுகளில் 30 ஆயிரம் முனைவர்கள் ஆய்வு கட்டுரைகள் தாக்கல் செய்து இருக்கின்றனர். மாணவர்களின் ஆராய்ச்சி மக்களுக்கும், நாட்டுக்கும் பயனளிப்பதாக இருக்க வேண்டும். சில தலைவர்கள் குறித்து ஆய்வு கட்டுரை தயாரிப்பதால் யாருக்கும் பயனிருக்க போவதில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 1267

    0

    0