ரசிகர்களின் ஆறாத வடு..25 வருடத்திற்கு முன்னாடி நடந்த சம்பவம்..பதிலடி கொடுக்குமா இந்தியா.!

Author: Selvan
8 March 2025, 8:07 pm

இந்திய அணியின் மறக்க முடியாத தோல்வி!

கடந்த 2000 ஆம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின,இந்தியா 264 ரன்கள் எடுத்தும்,நியூசிலாந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதையும் படியுங்க: போராடும் ‘காக்கா முட்டை’ பட சிறுவன்…கனவு நிறைவேறுமா.!

இந்திய அணியின் கேப்டன் சவுரவ் கங்குலி 117 ரன்கள் அடித்து சதமடித்தார்,தற்போது வரை ஐசிசி தொடரின் பைனலில் இந்திய வீரர் அடித்த சதமாக இது உள்ளது,மேலும் சச்சின் டெண்டுல்கர் 69 ரன்கள் எடுத்தார்.இந்திய அணி 50 ஓவர்களில் 264/6 என்ற வலுவான ஸ்கோரை பதிவு செய்தது.

India vs New Zealand 2000

கிறிஸ் கெயின்ஸ் 102* ரன்கள் விளாசி, நியூசிலாந்து வெற்றிக்காக ஆட்டத்தை கட்டுப்படுத்தினார்.ஒரு கட்டத்தில் 132/5 என்ற நிலையில் இருந்த நியூசிலாந்து, கிறிஸ் ஹாரிஸ் – கிறிஸ் கெயின்ஸ் கூட்டணியின் 122 ரன்கள் பார்ட்னர்ஷிப்பால் மீண்டு வந்தது. கடைசி 2 ஓவர்களில் வெற்றிக்காக 13 ரன் தேவைப்பட்ட நிலையில், வெங்கடேஷ் பிரசாத் வீசிய 49வது ஓவரில் 10 ரன்கள் வந்தன.கடைசி ஓவரில் தேவையான 3 ரன்களை எளிதாக எடுத்து, நியூசிலாந்து கோப்பையை கைப்பற்றியது.

இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக,பௌலர்களின் மோசமான பந்து வீச்சு,அதிக எக்ஸ்ட்ரா ரன்கள் மற்றும் முக்கிய நேரத்தில் விக்கெட்டுகளை கைப்பற்ற முடியாதது இருந்தன.இதனால் இந்திய அணியின் கோப்பை கனவு தகர்ந்தது.

25 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளது.பழைய தோல்வி மீண்டும் நிகழுமா அல்லது இந்திய அணி பழைய காயத்திற்கு மருந்தாக கோப்பையை கைப்பற்றுமா என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.

  • it is not easy to direct salman khan ரொம்ப கஷ்டம், அவர் இஷ்டத்துக்குதான் நடிப்பாரு- எல்லை மீறிப்போன முருகதாஸ் பட ஹீரோ?