இந்தியா பாராட்டும் தமிழக பட்ஜெட்.. நம்பர் 1 முதலமைச்சராக ஸ்டாலின் : மார்தட்டும் உதயநிதி ஸ்டாலின்!!
Author: Udayachandran RadhaKrishnan20 March 2022, 2:10 pm
மதுரை : தமிழக பட்ஜெட்டை இந்தியாவே பாராட்டுகிறது எனவும், நம்பர் ஒன் முதல்வராக ஸ்டாலின் செயல்படுகிறார் என்றும் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
மதுரை ஆனையூரில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் வெங்கல சிலையினை திமுக மாநில இளைஞர் அணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மூர்த்தி, அன்பில் மகேஷ், மெய்யனாதன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். பேரரசர் பெரும்பிடுகு முத்தரையருக்கு சிலை அமைக்க வேண்டும் என மக்கள் நீண்ட நாள் கோரிக்கையை தொடர்ந்து வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி ஏற்பாட்டில் 8 1/4 அடி உயரத்துக்கு வெங்கல சிலை திறக்கப்பட்டது.
திறப்பு விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “மதுரை என்றாலே அன்பு பாசமும் நிறைந்தது. தமிழகத்தில் ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருவதற்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம் தான் உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீத வெற்றி.
நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிதி நிலை அறிக்கையை இந்தியாவின் ஒட்டுமொத்த தலைவர்களும் பாரட்டுகின்றனர். இந்தியாவின் நம்பர் ஒன் முதல்வராக தமிழக முதல்வர் செயல்படுகிறார்.
உள்ளாட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்க்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் எந்தவித தவறும் செய்யாமல் பொறுப்புடன் பணியாற்ற வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். திமுக ஆட்சி மீது மக்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளார்கள்” என்றார்.