குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் ஒருசில நாடுகளில் இந்தியாவும் ஒன்று : புதுச்சேரி ஆளுநர் தமிழிசை பெருமிதம்..!!

Author: Babu Lakshmanan
16 March 2022, 5:03 pm

மதுரை : உலகிலேயே குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் ஒருசில நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தர ராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது :- உலகிலேயே சில நாடுகள் மட்டுமே குழந்தைகளுக்கான தடுப்பூசியை செலுத்த ஆரம்பித்துள்ளன. இந்தியாவில் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்துவதில் மிகப்பெரிய சாதனை பிரதமருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

தடுப்பூசி செலுத்துவதன் மூலம் குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பார்கள். கொரோனா குறைந்ததால் தடுப்பூசி போட வேண்டாம் என்பதில்லாமல், தடுப்பூசி போட்டதால் தான் கொரோனா இல்லை. தடுப்பூசி போட்டால் தான் எத்தனை அலை வந்தாலும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும்.

27ம் தேதி புதுவைக்கு விமான சேவை தொடங்க உள்ளது. அரசுப்பள்ளிகள் தரம் உயர்ந்து எல்லோரும் பள்ளிகளை நோக்கி வர வேண்டும். அரசுப்பள்ளி, அரசு மருத்துவமனைகள் தரம் உயர்த்த வேண்டும், எனக் கூறினார்.

தமிழகத்தில் பெண்களுக்கான திட்டங்கள் நிறைய செயல்படுத்தப்படுவதை போல புதுச்சேரியில் செய்யப்படுமா என்ற கேள்விக்கு, புதுச்சேரியில் நல்ல பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஒரு அரசு மாதிரி இன்னொரு அரசு இருக்க முடியாது, எனக் கூறினார்.

  • ajith kumar changed the lyrics of god bless u song in good bad ugly அது வேண்டாம் இதை வச்சிக்கோ- இந்த பாடல் வரியை மாற்றியது அஜித்தா?