பும்ரா இல்லனா இதான் கதி…வரலாற்றிலேயே படுமோசமான 2 ஓவர்கள்…ஆஸி.வெற்றிக்கு திருப்பு முனையாக அமைந்ததா..!
Author: Selvan5 January 2025, 12:02 pm
பும்ரா இல்லாமல் திணறிய இந்திய அணி
சிட்னியில் நடந்த இறுதி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் ஜாம்பவான் பவுலர் பும்ரா முதுகு வலி பிரச்சனை காரணமாக இரண்டாவது இன்னிங்ஷில் பவுலிங் போடவில்லை.
இதனால் இந்திய அணியின் மற்ற பவுலர்களான சிராஜ் மற்றும் பிரஷித் கிருஷ்ணா சிறப்பான பௌலிங் போட்டால் மட்டுமே இந்திய அணி வெற்றிபெற முடியும் என்ற சூழ்நிலையில் இருந்தது.
வெறும் 162 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்த இந்திய பேட்ஸ்மேன்கள் எப்படி ஆஸ்திரேலியா அணியை வீழ்த்த போகிறார்கள் என்ற பயம் ரசிகர்கள் மத்தியில் எழுந்த நிலையில்,ஆட்டத்தின் தொடக்கத்திலேயே இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிக மோசமான முதல் இரண்டு ஓவர்களை இந்திய அணி வீசியது.
முதல் ஓவரை வீசிய சிராஜ் 13 ரன்களை விட்டுக்கொடுத்தார்,அதன்பின்பு இரண்டாவது ஓவரை வீச வந்த பிரஷித் கிருஷ்ணாவும் 13 ரன்களை வாரி கொடுத்தார்.இதனால் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி முதல் இரண்டு ஓவர்களில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகமான ரன்களை விட்டுக்கொடுத்து மோசமான சாதனையை படைத்தது.
இதையும் படியுங்க: WTC-யோட கடைசி வாய்ப்பும் பறிபோனது…5-வது டெஸ்டில் மண்ணை கவ்விய இந்திய அணி…!
மூன்றாவது ஓவரில் ஆஸ்திரேலியா அணி 9 ரன்களை எடுத்து,அந்த அணி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் மூன்று ஓவர்களில் அதிகமான ரன்களை எடுத்து சாதனை படைத்தது.இதனால் இந்திய அணியின் வெற்றி நம்பிக்கை முதல் இரண்டு ஓவர்களில் கைவிட்டு சென்று,ஆஸ்திரேலியா அணிக்கு சாதகமாக அமைந்தது.
ஒருவேளை பும்ரா ஆடி இருந்தால் இந்திய அணி வெற்றி அடைந்திருக்கும் என ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இந்த தொடரில் ஆட்ட நாயகன் விருதை தனி ஆளாக போராடி ஆஸ்திரேலியா வீரர்களுக்கு பயத்தை காட்டிய பும்ரா வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.