பும்ராவுக்கு திடீர் காயம்… தடுமாறும் இந்திய அணி…உலககோப்பை கனவு கேள்விக் குறியா..?

Author: Selvan
4 January 2025, 12:58 pm

உலககோப்பை கனவு நிறைவேறுமா..!

இந்திய-ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே பரபரப்பாக நடைபெற்று கொண்டிருக்கும் 5-வது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் 2-ஆம் நாள் ஆட்டத்தை தொடங்கிய ஆஸ்திரேலியா அணி இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்து வந்தனர்.

indian team struggle  in 5th test match

இந்த சூழலில் உணவு இடைவேளைக்கு பிறகு பௌலிங் போட வந்த இந்திய வீரர்கள், ஒரு ஓவர் மட்டுமே போட்டு திடீரென ஓய்வு அறைக்கு சென்றார் இந்திய அணியின் நட்சத்திரம் பும்ரா.

அதன் பின்பு நீண்ட நேரம் ஆகியும் பும்ரா மைதானத்திற்கு வராததால் ரசிகர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.அப்போது திடீரென அவர் மருத்துவமனைக்கு ஸ்கேன் எடுக்க சென்றார்.இதனால் அவருக்கு மிகப்பெரிய காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்க: ஃபார்மில் இல்லைதான்.. ஆனால்.. கட் அன்ட் டைட்டாக பேசிய ரோகித் சர்மா!

களத்தில் இந்திய அணியை விராட் கோலி வழிநடத்தினார் அப்போது பும்ரா இல்லாமல் எப்படி மற்ற பவுலர்கள் தங்களுடைய ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என கேள்வி எழுந்த நிலையில் சிராஜ் மற்றும் பிரதீப் கிருஷ்ணா அற்புதமாக பவுலிங் போட்டு ஆஸ்திரேலியாவை 181 ரன்களுக்கு சுருட்டினார்கள்.

இதனால் 4 ரன் லீட் ஓட ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி,வழக்கம் போல டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் தங்களுடைய விக்கெட்களை பறிகொடுத்தனர்.பும்ராவுக்கு காயம்,இந்திய பேட்ஸ்மேன்களும் தொடர்ந்து சொதப்பி வருவதால் இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெறுமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…