IND Vs PAK:வெற்றி யார் பக்கம்…அனல் பறக்கும் ஆட்டத்தை பார்க்க படையெடுக்கும் ரசிகர்கள்.!
Author: Selvan23 February 2025, 2:52 pm
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு
கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கும் ,அந்த வகையில் சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் விளையாடி வரும் இரு அணிகளும் இன்று துபாயில் நடக்கின்ற ஆட்டத்தில் மோதுகிறது.
இதனால் டிக்கெட் விற்பனை தொடங்கிய சில மணி நேரத்திலே அனைத்தும் டிக்கெட்களும் விற்பனை ஆகிவிட்டது,இந்த தொடரில் பாகிஸ்தான் அணி ஏற்கனவே நியூசிலாந்து அணியிடம் படுதோல்வி அடைந்தது,இதனால் இந்திய அணியை வீழ்த்தினால் மட்டுமே பாகிஸ்தான் அணிக்கு அரையிறுதி செல்லும் வாய்ப்பு உள்ளது,ஆனால் இந்திய அணி ஏற்கனவே வங்ககதேசம் அணியை வீழ்த்தி வெற்றியோடு களம் இறங்குவதால்,இந்த போட்டியில் இந்திய அணி வென்றால் நிச்சயயம் அரை இறுதிக்கு தகுதியாகிவிடும்.
இதையும் படியுங்க: அதிரடியாக பெயரை மாற்றிய பிரபல நடிகர்..படத்தின் டீசரை கவனித்தீர்களா.!
இரு அணிகளுக்கும் முக்கியமான போட்டி என்பதால் ரசிகர்கள் ஆட்டத்தை பார்க்க மைதானத்திற்கு படையெடுத்து வருகின்றனர்.
சாம்பியன்ஸ் ட்ராபி தொடரை பொறுத்தவரை பாகிஸ்தான் அணி,இந்திய அணியை விட அதிக முறை வென்றுள்ளது,இதுவரை 5 முறை சாம்பியன்ஸ் தொடரில் மோதிய ஆட்டத்தில் மூன்று முறை பாகிஸ்தான் அணியும்,இரண்டு முறை இந்திய அணியும் வென்றுள்ளது,இதனால் இந்திய அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்தி 2017 ஆம் ஆண்டின் தோல்விக்கு பதிலடி கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்