இந்திய தேசிய கொடியை புறக்கணித்த பாகிஸ்தான்..ICC நடவடிக்கை எடுக்குமா..ரசிகர்கள் ஆவேசம்.!

Author: Selvan
17 February 2025, 6:18 pm

ஏன் இந்திய தேசிய கொடியை மட்டும் பறக்கவிடவில்லை

சர்வேதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் தரவரிசையில் முதல் 8 அணிகள் பங்கு பெரும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் வருகின்ற 19ஆம் தேதி பாகிஸ்தானில் நடைபெற உள்ளது.

இதையும் படியுங்க: பின்தொடர்ந்த உருவம்.. கூச்சலிட்ட காவலர்.. அண்ணாமலை கடும் விமர்சனம்!

ஏற்கனவே இந்திய அணி பாதுகாப்பு நலன் கருதி பாகிஸ்தான் சென்று விளையாட மறுத்த காரணத்தினால்,இந்திய அணி விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெற உள்ளது.இந்த சாம்பியன்ஸ் தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்துகிறது.இதனால் அணிகளின் கேப்டன்கள் பங்கு பெறும் நிகழ்ச்சியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கலந்து கொள்ளவில்லை.

தற்போது பாகிஸ்தானில் உள்ள கராச்சி மற்றும் லாகூர் மைதானம் சீரமைக்கப்பட்டு அங்கே தொடரில் பங்குபெறும் அணியின் தேசிய கொடிகள் பறக்கவிடப்படும்,இது எந்த நாடு நடத்துகிறதோ,அந்த நாட்டின் கிரிக்கெட் வாரியம் செய்வது வழக்கமான ஒன்று,ஆனால் இந்திய அணியின் தேசியக்கொடியை மட்டும் தவிர்த்து மற்ற ஏழு நாடுகளில் கொடிகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பறக்கவிட்டுள்ளது.

இதனால் இந்திய ரசிகர்கள் பலர் பாகிஸ்தானின் இந்த செயல்,இந்தியாவை அவமதிப்பிப்பது போல் உள்ளது,உடனே ICC தலைவர் ஜெயிஷா இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.இதனால் வருகின்ற ICC தொடரில் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டங்கள் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • நான் பார்க்காத பிரச்சனையா..’டிராகன்’ பட இயக்குனருக்கு சிம்பு கொடுத்த தரமான அட்வைஸ்.!
  • Leave a Reply