விரைவில் இந்தியன் 2 படபிடிப்பு.? இயக்குநர் சங்கர் சூசகமாக அறிவிப்பு!

Author: Rajesh
8 June 2022, 11:59 am

கமல் 2 வேடங்களில் நடித்து 1996-ல் வெளிவந்த இந்தியன் திரைப்படம் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தகுந்த படங்களில் ஒன்றாக அமைந்தது. வழக்கம்போல இந்தப் படத்தை மிக பிரமாண்டமாக இயக்குனர் ஷங்கர் உருவாக்கியிருப்பார். ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தது. க்ளைமேக்ஸில் அப்பா கமல் சேனாபதி தப்பிச் சென்று, வெளிநாட்டில் இருந்து போன் பேசுவது போன்று காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.

இந்நிலையில், முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இந்தியன் 2 படத்தை எடுக்க முடிவு செய்யப்பட்டு லைகா தயாரிப்பில், கமல் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் படம் உருவாகி வந்தது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமானுக்கு பதிலாக இசையமைப்பதற்கு அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

தயாரிப்பு நிறுவனத்திற்கும், ஷங்கருக்கும் ஏற்பட்ட பிரச்னை, கிரேன் விபத்தில் 3 பேர் பலியானது, கொரோனா உள்ளிட்ட காரணங்களால் இந்தியன் 2 படப்பிடிப்பு கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறாமல் இருக்கிறது.

இந்நிலையில் விக்ரம் படத்தின் வெற்றிக்கு பின்னர் உற்சாகமாக உள்ள கமல், இந்தியன் 2 படத்திற்கு ரெடியாக இருக்குமாறு ஒளிப்பதிவாளர் ரத்னவேலுவுக்கு ட்வீட் செய்திருந்தார். டான் பட சக்சஸ் விழாவில் பேசிய உதயநிதி, விரைவில் இந்தியன் 2 படத்திற்கான பணிகள் ஆரம்பமாகும் என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், இயக்குனர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தின் டிஸ்ப்ளே பிக்சரில் இந்தியன் 2 படத்தின் போஸ்டரை வைத்திருக்கிறார். இதன் மூலம் விரைவில் இந்தியன் -2 படம் விரைவில் துவங்கப்படும் என இயக்குனர் ஷங்கர் சூசகமாக தெரிவித்து இருப்பதாக நெட்சன்கள் தெரிவித்து வருகின்றனர்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!